சம்பளம் கம்மி தான்.. ஆனாலும், பீரியட்ஸ் வலியோட நடிச்சேன்.. சாக்ஷி அகர்வால் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், தமிழ் மொழியை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சம்பளம் கம்மி தான் இருந்தாலும் பீரியட்ஸ் வலியோடத்தான் நடிச்சேன் என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார்.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட சாக்ஷி அகர்வால், அப்போதே ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, ஐடியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்த போதும், சினிமாவில் இருந்த ஆர்வத்தால், அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு சினிமா பக்கம் தாவினார். அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த இவர், கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார்.

சாக்ஷ் அகர்வால்: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என கணக்கு போட்டு வந்த சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி பவுசருடன் வலம் வந்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகை சாக்ஷி அகர்வால்,கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்து வந்தாலும், இன்னும் நாயகியாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் எதிர்வரும் வருடங்களில் வெளியாகும் படங்களில் அவர் நாயகியாக நடிக்க உள்ளார். தமிழில் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் பகீரா என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்தார் அவர். மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து வருகிறார்.

சம்பளம் முக்கியம் இல்ல: இந்நிலையில் சாக்ஷி அகர்வால், தனது சினிமா வாழ்க்கை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் நன்றாக படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலைப்பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது என் சம்பளம் 2.5 லட்சம். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிக்க வந்தேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக படித்தவர்கள், அவர்கள் பிஸ்னஸ் செய்கிறார்கள் அவர்களுக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. அவர்களுக்கு சினிமா பிடிக்கவில்லை என்றாலும் என் ஆசைக்காக ஓகே சொன்னார்கள் என்றார்.
பீரியட்ஸ் வலி: மேலும் படத்தின் கதையை வைத்துத்தான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொள்வேன். கேஸ்ட் 2 படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அப்போது அங்கு மைனஸ் 2 டிகிரி குளிர் இருந்தது. அப்போது நான் குட்டி ஸ்கட் மற்றும் குட்டி ஷர்ட் போட்டுக்கொண்டு, தண்ணீருக்குள் இறங்கி என் கணவரை தேட வேண்டும். தண்ணீர் ரொம்ப கூலாக இருந்தது, அந்த நேரம் எனக்கு பீரியட்ஸ், அந்த வலியோடத் தான் நான் நடிச்சேன். அந்த படத்தில் எனக்கு கம்மியான சம்பளம் தான். இந்த விஷயத்தை நான் செய்ததற்கு காரணம் அந்த கதாபாத்திரம் தான். தயாரிப்பாளர், இயக்குநர் என்னை நம்பி ஒரு கதாபாத்திரத்தை கொடுக்கும் போது அதை சரியாக செய்ய வேண்டும் என்ற வெறி என்னிடம் இருந்தது என்று சாக்ஷி அகர்வால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











