இப்படி குறுகுறுன்னு பார்த்தா எப்படி.. வெள்ளை நிற உடையில் ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்த பிக்பாஸ் ஜுலி!
சென்னை: கடந்த 2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மிகப் பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் நடிகை ஜூலி. இதையடுத்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலேயே பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களை ஜூலி பெற்றார்.
ஆனாலும் அடுத்ததாக நடந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவரது ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஜுலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இதனால் ஏராளமான பாலோயர்களையும் பெற்று வருகிறார். அடுத்தடுத்த போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைக்கிறார்.

பிக்பாஸ் போட்டியாளர் ஜூலி: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனிலேயே அதிரடியாக களமிறங்கி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றவர் ஜுலி. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் மக்களிடையே தன்னை வெளிப்படுத்தினார். அதில் ஜுலியின் போராட்டத் திறனை கண்டு வீர தமிழச்சி என்றெல்லாம் மக்கள் புகழ தொடங்கினர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தியது. இதனால் மனம் கலங்கவில்லை ஜுலி. மாறாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தன்னுடைய இமேஜை பாசிட்டிவாக மாற்றிக் காட்டினார்.
சமூக வலைதளங்களில் பிசி: தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஜுலி. இந்நிலையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் இன்ஸ்டாகிராமில் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த புகைப்படங்களில் தன்னுடைய அழகான சிரிப்பை வெளிப்படுத்தியும் குறுகுறுவென்ற பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்டும் உள்ளார் ஜுலி. மேலும் ஸ்டைலிஷ் நடையிலும் அடக்கமான கெட்டப்பிலும் அவர் அதிரடி கிளப்பியுள்ளார்.

ஜுலியின் புதிய புகைப்படங்கள்: ஜுலியின் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய கனவுகளை துரத்திக் கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் அடுத்தடுத்த நினைவுகளை சொந்தமாக்கி வருவதாகவும் ஜுலி இந்த பதிவின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது பிக்பாஸ் ஜூலியா, ஆளே மாறிவிட்டாரே என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோயர்கள்: அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் ஜுலி. இவரை இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய மூன்று லட்சம் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். முன்னதாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்புவும் ஜூலியின் உற்சாகமான மனநிலையிலான நடவடிக்கைகள் தான் தனக்கு வேண்டும் என்று கூறியதை பார்க்க முடிந்தது. அதற்கேற்பவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











