Bigg Boss Tamil Season 8: மண்ட பத்திரம் பாஸ்.. இவங்கதான் போட்டியாளர்களா.. சமாளிப்பாரா விஜய் சேதுபதி
சென்னை: நாளை அதாவது அக்டோபர் 6 முதல் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது. இந்த சீசனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மாற்றம் மற்றும் எதிர்பார்ப்பு என்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் மிகவும் பிரமாதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்படி இருக்கையில், இந்த சீசனில் இருந்து அவரின் சொந்த காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில் விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகின்றார் என்றதும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் யார் யார் போட்டியாளர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யார் யார் போட்டியாளர்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் உலாவரத்தொடங்கிவிட்டது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
பிக் பாஸ் இதுவரை சின்னத்திரையிலும் சினிமாவிலும் தனக்கான இடத்தினை நிறுவ முயற்சிக்கின்றவர்களை போட்டியாளர்களாக வைத்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருந்து வந்துள்ளது. அதேநேரத்தில் சினிமாவில் இருக்கக்கூடிய மூத்த கலைஞர்களும் கூட இந்தப் போட்டியில் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு சீசனிலும் அனைத்து வகையான வயதினைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக களமிறக்கப்படுகின்றார்கள்.

அவ்வகையில் இந்த சீசனில் மக்களுக்கு ஏற்கனவே சினிமா மூலமாகவும் சின்னத்திரை மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவர்கள் அதிகமானோர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர் எனக் கூறப்படுகின்றது. அதேநேரத்தில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மற்றும் பல்வேறு சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகர்களும் களமிறக்கப்படுகின்றனர். மற்ற தொலைகாட்சிகளில் பணிபுரிபவர்கள் அல்லது மாற்று ஊடகங்களில் பணி புரிபவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியாளர்கள்: அந்த வகையில், இம்முறை யார் யாரெல்லம் பிக் பாஸ் சீசன் 8இல் கலந்து கொள்ளவுள்ளார்கள் என சமூக வலைதளத்தில் தகவல்கள் உலா வருகின்றது. அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்தவரும் இன்ஸ்டா பிரபலமுமான ஜோயா போட்டியாளராக பங்கேற்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. சின்னத்திரை நடிகர் தீபக் தினகரன் போட்டியாளராக களமிறங்குகின்றார் என கூறப்படுகின்றது. சின்னத்திரை நடிகர் வி.ஜே விஷால் போட்டியாளராக பங்கேற்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பால் டப்பா: தயாரிப்பாளர் ரவீந்திரனும் சார்பட்டா பரம்பரை, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் போட்டியாளராக களமிறங்குவதாக கூறப்படுகின்றது. மக்கா மிஷி பாடலை எழுதிய பால் டப்பா எனப்படும் அனீஷ், சின்னத்திரை நடிகை பவித்ரா, நடன இயக்குநர் கோகுல்நாத், மகாராஜா படத்தில் நடித்தவரும் வளர்ந்து வரும் இளம் நடிகையுமான சச்சனா, பிரபல மாடல் அழகி சஞ்சனா நஞ்சுண்டன், சின்னத்திரை நடிகர் அர்னவ் ஆகியோரும் போட்டியாளர்களாக கலந்து கொள்ளவுள்ளார்கள் எனக் கூறப்படுகின்றது.

ரஞ்சித்: சின்னத்திரை நடிகை அன்ஷிதா, விஜய் டிவி புகழ் நடனக் கலைஞர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் சுனிதா, வளர்ந்து வரும் நடிகை தர்ஷாகுப்தா, சீனியர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், சின்னத்திரை நடிகர் அருண் பிரசாந்த், தொகுப்பாளினி ஜாக்குலின், மற்றும் சீனியர் நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்குகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றது.


Click it and Unblock the Notifications











