Bigg Boss Tamil: பிக் பாஸ் சீசன் 9இல் களமிறங்கும்.. மோசமாக ட்ரோல் செய்யப்பட்ட சீரியல் நடிகை

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது என்று கூறப்படுகிறது. வழக்கமாகவே அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு போட்டியாளர்கள் யார் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதால் ரசிகர்கள் அது யார் யார் என்று இணையத்தில் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகை நேஹா. இவர் அந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் கடந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கி கடைசி நாள் வரை இருந்த விஜே விஷால்க்கு ஆதரவாக வீட்டிற்குள் வந்திருந்தார். சின்னத்திரை நடிகை நேஹா இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர். சீரியலில் இடம் பெற்ற ஒரு நடனக் காட்சியை இணையவாசிகள் பெருமளவுக்கு ட்ரோல் செய்தார்கள்.

Vijay TV Bigg Boss Tamil Season 9 Baakiyalakshmi Serial Actress Neha Will Be One Of The Contestant

அதுவும் ஒரு கட்டத்தில் ட்ரோல்கள் என்பது மிகவும் எல்லை மீறி, தனிமனித தாக்குதல் போல மாறியது. இணையவாசிகள் பலரும் ஒருமையிலும் தரக்குறைவாகவும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்படி இருக்கையில், நடிகை நேஹா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் ட்ரோல் செய்யப்பட்டது தொடர்பாக கண்கலங்க பேசினார். அதாவது, "ஒரு கட்டத்தில், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலை எனக்கு வந்துவிட்டது. மக்கள் என்னைப் பற்றி பேசினாலும், எல்லோரும் மனிதர்கள்தான்.

கண்ணீர்: இதைப் பொருட்படுத்தக் கூடாது என்று மனதுக்கு தெரிந்தாலும், அது என்னை காயப்படுத்தியது. அதன் பின்னர் அது என்னை மேலும் வலிமையாக்கியது என்றுதான் கூறவேண்டும். ஒரு காலத்தில் கண்ணாடி முன் நின்று 'நான் அழகாக இருக்கிறேன்' என்று சொல்ல முடியாமல் தயங்கினேன். அந்த மனௌளைச்சலையும் கடந்து, ஒருகட்டத்தில் அதையும் சொல்லத் தொடங்கினேன். அது என்னை இன்னும் வலிமையாக்கியது" என அழுது கொண்டே பேசினார். இணையவாசிகள் ஒருபுறம் அவரை ட்ரோல் செய்தாலும் அவருக்கு ஆதரவாக இணையத்தில் குரல் கொடுத்தவர்களையும் பார்க்க முடிந்தது.

Vijay TV Bigg Boss Tamil Season 9 Baakiyalakshmi Serial Actress Neha Will Be One Of The Contestant

ட்ரோல்களுக்கு பதிலடி: இந்நிலையில் சின்னத்திரை நடிகை நேஹா பிக் பாஸ் சீசன் 9இல் களமிறங்கப் போகிறார் என்ற தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவிவரும் தகவலாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவர் கலந்து கொண்டு தனது இன்னொரு கோணத்தை வெளிப்படுத்தி எந்த இணையவாசிகள் இவரை ட்ரோல் செய்தார்களோ, அதே இணையவாசிகளை தனக்கு ஆதரவாக வாக்கு செலுத்த வைப்பாரா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

சாண்டி மாஸடர் மைத்துனி: அதேபோல் இந்த சீசனில் களமிறங்கவுள்ள மற்றொரு பெண் பிரபலம் என்று பேசப்படுபவர், பிரபல டான்ஸ் மாஸ்டரும், பிக் பாஸ் சீசன் 3இன் ஃபைனலிஸ்ட்டான சாண்டி மாஸ்டரின் மனைவியின் தங்கை. அதாவது சாண்டி மாஸ்டரின் மைத்துனி. இது மட்டும் இல்லாமல், இவரும் நடனக் கலைஞர் ஆவார். இவரும் இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உலா வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X