BB Kondattam: அம்மாவை சும்மா நினைச்சாங்க.. அதனாலதான் விளையாடினேன்.. விசித்ரா காட்டம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு கடந்த ஜனவரியில் நிறைவு பெற்றது. இந்த சீசனில் அர்ச்சனா டைட்டிலை வெற்றிப் பெற்றிருந்தார். அவருக்கு கடைசி வரையில் மாயா, தினேஷ் உள்ளிட்டவர்கள் டஃப் கொடுத்தனர். இந்த சீசனிலும் லவ் டிராக் தனித்தனியாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஓடியதை பார்க்க முடிந்தது. இந்த லவ் குறித்த பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அடுத்த சீசனில் அவர் இணைய மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் தனித்தனியாக பார்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு இந்த காம்பினேஷன் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து வருகிறது. போட்டியாளர்களின் நடவடிக்கைகைகளை சுட்டிக் காட்டி, நல்லதை பாராட்டியும் அதே நேரத்தில் மற்றவற்றை கூறி திட்டி தீர்க்கவும் தயங்காத அவரது நடவடிக்கையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது. ஆனாலும் அவர் ஒரு சிலரிடம் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

Vijay TV s Biggboss Kondattam show telecasted today

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷனாக தொடர்ந்து 7 சீசன்களிலும் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு துறையிலிருந்து போட்டியாளர்களை களமிறக்கி இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து 100 நாட்கள் எந்தவிதமான தொழில்நுட்ப இணைப்பும் இல்லாமல் வித்தியாசமான மனோபாவங்களை கொண்ட நபர்களின் பயணத்தை களமாக கொண்ட இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக அமைந்து வருகிறது.

பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரியில் நடந்து முடிந்துள்ளது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி ஏராளமான பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு பட வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு துவக்கம் முதல் இறுதி வரையில் விசித்ரா, தினேஷ், மாயா உள்ளிட்டவர்கள் டஃப் கொடுத்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பிக்பாஸ் கொண்டாட்டம் இன்றைய தினம் ஒளிபரப்பாகியது. இதற்கான ப்ரமோக்கள் முன்னதாக அதிகளவில் வெளியான நிலையில் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது.

சூப்பர் ஆட்டம் போட்ட பூர்ணிமா: நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களை கவரும்வகையிலான பல விஷயங்கள் நடந்தன. இன்று பிற்பகல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. பூர்ணிமா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பான ஆட்டம் போட்டதையும் பார்க்க முடிந்தது. பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு மற்றும் பின்பு என அவர் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா, இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு பெரிய குடும்பத்தையே தான் சம்பாதித்துள்ளதாகவும் மாயா ஸ்குவாட் என்ற பெயரில் தனக்கு ரசிகர்கள் வட்டம் செயல்பட்டதையும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


விசித்ரா காட்டம்: தான் இந்த நிகழ்ச்சியில் விசித்ராவாக உள்ளே போனதாகவும் விச்சும்மாவாக வெளியில் வந்ததாகவும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார். தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் தன்னுடைய குழந்தைகளுக்கு கிடைக்கும்வகையில் விட்டுக் கொடுப்பவர்தான் அம்மா என்றும் ஆனால் அவர் ஜெயிப்பதற்காக விட்டுக் கொடுக்காமல் ஆடியது நியாயமா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த விசித்ரா, அம்மாவை அம்மாவாகவே நினைத்திருந்தால் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் ஆனால் அம்மாவை சும்மாவாக நினைத்ததால் அப்படி விளையாட வேண்டியிருந்தது என்று அதிரடியாக பதிலளித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X