சின்னத்திரை கலைஞர்களின் கலக்கல் ஜோடி நம்பர் 1 சீசன் 6
விஜய் டிவியின் பிரபலமான ஜோடி நம்பர் 1 ரியாலிட்டி ஷோ, சீசன் 6 மீண்டும் கலக்கலான ஜோடிகளுடன் நேயர்களை கவர வருகிறது. இசை நிகழ்ச்சியோ நடனநிகழ்ச்சியோ எதிலும் வித்தியாசத்தை தருவது விஜய் டிவி அந்த வகையில் ஜோடி நம்பர் 1 அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி.
இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. இப்போது 6 வது சீசன் தொடங்கியுள்ளது. மார்ச் 23 முதல் இந்த நடனநிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
இந்த நடனநிகழ்ச்சியின் முதல் சீசனில் சின்னத்திரையின் ரீல் ஜோடி, ரியல் ஜோடி என்று தனித்தனியாக போட்டு போட்டனர். இப்போது சின்னத்திரையின் கலக்கல் ஜோடிகள் களம் இறங்கியுள்ளனர்.

கலக்கல் நடன நிகழ்ச்சி
ஜோடி நம்பர் 1 சீசன் 6ல் நாகேந்திரபிரசாத்-ஆனந்தி, அன்வர் - பூஜா, ரோபோ ஷங்கர் - சந்தியா, அபிநய்-ஜாக்குலின், ராஜா-ஷிவானி,மனோஜ்- சுவேதா, சத்யா - ஷில்பா, தேவ் ஆனந்த்-மோனிகா,ரபீக் - காப்ரில்லா, மணிகண்டன் - தேவிப்பிரியா ஆகிய 10 ஜோடிகள் பங்கேற்கின்றனர்.

கலைஞர்களின் தீயான நடனங்கள்
இந்த நடன நிகழ்ச்சியில் நெருப்புப் பொறி பறக்கும் என்பதை சிம்பாலிக்காக சொல்வதைப் போல முன்னோட்ட நிகழ்ச்சியிலேயே நெருப்பு பறக்கிறது.

வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு நம் 1
வித்தியாச நிகழ்ச்சிகளை மட்டுமே தருவது என்ற பிடிவாதத்துடன் இருப்பது விஜய் டிவி. இந்த டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள் பிற சேனல்களில் பல வடிவங்களில் பல பெயர்களில் ஒளிபரப்பாகின்றன. கலைஞர் தொலைக்காட்சியின் மானட மயிலாட கூட இதன் ஒரு வடிவம்தான்.

பிரபலமான நடுவர்கள்
கலா மாஸ்டர், ரம்யா கிருஷ்ணன், பிரசாந்த், சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர், ராதிகா, கவுதமி என பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வந்துள்ளனர்.

நடுவர்கள் சீன் போடவேண்டாமே
ரியாலிட்டி ஷோ என்றாலும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் போடும் சீன் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதுவும் சிம்பு அழுத அழுகை உலக பிரசித்தி பெற்றது.

அட்டகாசமான பரிசுகள்
இந்த நடனப்போட்டியில் கடைசி சுற்றுவரை வெளியேறாமல் நிலைத்து நின்று வெற்றி பெறும் ஜோடிக்கு சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன. அந்த ஜோடி சிறந்த ஜோடியாக நம்பர் 1 ஜோடியாக தேர்ந்தெடுக்கப்படும். அட்டகாசமான நடனப்போட்டியை மார்ச் 23 முதல் காணத்தயாராகுங்கள். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











