பிக்பாஸ் 8 கொண்டாட்டம்.. நெகிழ்ச்சியில் முத்துக்குமரன்.. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அடுத்தடுத்த சீசன்களை கொடுத்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்து தற்போது 8 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த 8வது சீசனின் துவக்கத்தில் களை கட்டாத நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் களேபரமாக பிக் பாஸ் வீடு காணப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இதன் வெற்றி கொண்டாட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு சேனல் ஒளிபரப்ப உள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளார்.

television bigg boss tamil 8 show

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் கவனத்தை ஈர்த்து வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சேனலில் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 நிறைவடைந்துள்ளது/ கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 106 நாட்களை தொடர்ந்து பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்த நிலையில் இந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

பிக்பாஸ் 8 வெற்றிக் கொண்டாட்டம்: பிரம்மாண்டமாக நடந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் முத்துக்குமரன் மற்றும் அவருடைய பெற்றோர் நிகழ்ச்சியில் தோன்றி நெகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தனர். ரன்னர் அப்பாக சௌந்தர்யா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவரும் கொண்டாடப்பட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம் வரும் ஞாயிறு மாலை 4:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான பிரமோவில் முத்துக்குமரனை பாராட்டி சகப் போட்டியாளர்கள் பேசியதை பார்க்க முடிந்தது.

வெற்றிக் கொண்டாட்ட பிரமோ: நிகழ்ச்சியில் பேசிய மஞ்சரி, முத்துக்குமரனின் பேச்சு வெறும் பேச்சு என்று சுருக்கி விட முடியாது என்றும் அது மாற்றத்திற்கான பேச்சு என்றும் அதனால்தான் முத்துக்குமரன் இங்கு நிற்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய முத்துக்குமரனின் அம்மா, எல்லாரும் ஜெயித்ததாக இந்த வெற்றியை தங்களது ஊரில் கொண்டாடி வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய முத்துக்குமரனின் அப்பா, தன்னுடைய மகன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறானே, நம்மிடம் சொல்லவில்லையே என்று சங்கடப்பட்டதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே தொடர்ந்து பேசிய முத்துக்குமரன் தான் நான்கு ஆண்டுகள் தான் சிரமப்பட்டதாகவும் ஆனால் தன்னுடைய அப்பா தன்னுடைய நான்கு வயதில் இருந்தே சிரமப்பட்டதாகவும் பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்பாதான் ஹீரோ: தன்னுடைய அப்பாதான் ஹீரோ என்றும் முத்துக்குமரன் கூறியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து முத்துக்குமரனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது. தன்னுடைய அப்பா கைகளால் அதை பெற்றுக் கொண்டார் முத்துக்குமரன். இவற்றையெல்லாம் கோர்வையாக விஜய் டிவி தற்போது பிரமோவாக கொடுத்துள்ளது. இதையடுத்து இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதன் முதல் பாகம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X