விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி!

சென்னை: விஜய் டிவி தன்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது என பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் நடிகை மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாய்ப்பிருந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் மதுமிதா.

சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது நிலைப்பாட்டை நிரூபிக்க கையை கத்தியால் வெட்டிக்கொண்டார் மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியை மீறியதால் மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விஜய் டிவி நிர்வாகம்

விஜய் டிவி நிர்வாகம்

இந்நிலையில் மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் நேற்று கிண்டி தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தது. அதில் எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா, தன்னை காயப்படுத்திக்கொண்டதால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்துக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

அவர் செல்லும்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ஒப்பந்தத்தில் கூறியபடி ஏற்கனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார். மீதம் உள்ள பாக்கி தொகையை திருப்பி தருவதாக கூறி இருந்தோம். அதை ஒப்புக்கொண்டு அவர் சென்றார்.

வாய்ஸ் மெசேஜ்

வாய்ஸ் மெசேஜ்

இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். அதில் எனக்கு தரவேண்டிய பாக்கி பணத்தை 2 நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முற்றிலும் பொய்யானது

முற்றிலும் பொய்யானது

இந்நிலையில் தன்மீதான புகார் குறித்து விளக்கமளிக்க இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் மதுமிதா. அப்போது, என் மீது விஜய் டிவி நிர்வாகம் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது.

இன்னும் மீளவில்லை

இன்னும் மீளவில்லை

எனக்கு தரவேண்டிய மீதித்தொகையை கொடுக்கும்படி கேட்டேன். நிர்வாகமும் தருவதாக ஒப்புக்கொண்டது, பிறகு ஏன் என் மீது புகார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. விஜய் டிவி நிர்வாகம் என் மீது புகார் கொடுத்துள்ள அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.

எந்த புகாரும் வந்ததில்லை

எந்த புகாரும் வந்ததில்லை

இந்த பிரச்சனையை விஜய் டிவி நிர்வாகமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் சாரும் பேசி தீர்க்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளேன் என் மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை, நானும் யார் மீதும் எந்த புகாரும் கொடுத்ததில்லை.

என் மீதான நியாயம் புரியும்

என் மீதான நியாயம் புரியும்

நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன் என்பது குறித்து தற்போது பேச விரும்பவில்லை. நான் கையை அறுத்துக்கொண்ட காட்சிகளை ஒளிபரப்பினால் என் பக்கம் உள்ள நியாயம் புரிய வரும். விஜய் டிவி நிர்வாகமே ஒரு பிரஸ்மீட்டிற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்கள், அப்போது இதுகுறித்து பேசுகிறேன்.

ஆதரவளித்ததற்கு நன்றி

ஆதரவளித்ததற்கு நன்றி

இப்போது வரை விஜய் டிவியுடனான ஒப்பந்த கட்டுப்பாடுகளின் படியே நடக்கிறேன். எனக்கு ட்ரீட்மென்ட் கூட விஜய் டிவி நிர்வாகம் மூலமாகத்தான் அளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சையில்தான் இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு பேசினார் நடிகை மதுமிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X