கேப்டன் சமாதியில் சத்தியம்.. சொன்னதைச் செய்யும் குக் வித் கோமாளி புகழ்! பாராட்டு!
சென்னை: விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் புகழ். விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ், அதன் பின்னர் விஜய் டீவியால் தவிர்க்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளார் எனக் கூறும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சின்னத்திரை முக்கியமான ஸ்டாராக இருந்தாலும் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கின்றார். இந்நிலையில் இவர் தனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு உணவு வழங்கி வருகின்றார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் திசை வழிப்போக்கினை மாற்றியவர் எனக் கூறலாம். ஆமாம், தான் வளரும்போது, உணவு உண்பதற்காக தான் அவமானப்பட்டத்தைப்போல் யாரும் அவமானப்பட்டுவிடக்கூடாது என முடிவெடுத்தார். இதனால் அவர் ஒரு உட்ச நட்சத்திரமாக வளர்ந்த பின்னர், தனது சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை படப்பிடிப்பின்போது பணியாற்றும் அனைவருக்கும் உணவுக்காக செலவு செய்தார். இது மட்டும் இல்லாமல் தனது அலுவலகத்திலும் உணவு வழங்கி வந்தார்.

இது அதுவரை தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருந்த யாருமே இதைச் செய்தது இல்லை. நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவர் மறையும்போது தமிழ் சினிமாவில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகியிருந்தது. அதேபோல் அவர் களமிறங்கிய அரசியலில் இருந்து மும்முரமாக செயல்பட்டும் சில ஆண்டுகள் ஆகியிருந்தது. இப்படியான நிலையிலும்கூட அவரது மறைவுக்கு சென்னையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மக்கள் கூடினர். இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்தது. முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் என அனைவரும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
கேப்டன் போல்: அதேபோல் திரைத்துறையில் அனைவரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இப்படியான நிலையில், விஜயகாந்த் சமாதியில் நகைச்சுவை நடிகர் புகழ் ஒரு உறுதி ஏற்றிருந்தர். பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று நடிகர் புகழ் அவர்கள் நடிகர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் இன்று 251 வது நாளை எட்டியுள்ளது.
ஆண்டு முழுவதும்: ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும், அது ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாகவும், வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த தன்னுடைய வெற்றிக்கு மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாக நடிகர் புகழ் தெரிவித்துள்ளார். புகழின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். அவரால் பசியாறிய பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











