குக் வித் கோமாளி சீசன் 6: களமிறங்கும் பிக் பாஸ் போட்டியாளர்.. அப்போ சண்டை கன்பார்ம்!
சென்னை: அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டவர் கோமாளியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் மற்றொன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதில், ஜனவரியில் பிக் பாஸ் முடிவடைந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என பலர் காத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை செஃப் வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்ட நிலையில், கடந்த சீசனில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகி, சன் தொலைக்காட்சி தயாரித்த சமையல் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குக்குகள் சமைப்பதும், அவர்களை கோமாளிகள் சமைக்க விடாமல் செய்வதும் என நிகழ்ச்சி கலகலப்பாக செல்லும். இதில் புகழ் செய்யும் சேட்டையை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி: இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஜந்து சீசன்களை வெற்றி கரமாக கடந்து விட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், சிவாங்கிக்கு சமைக்கவே தெரியவில்லை. இருந்த போதும், நடுவர்கள் அவரை பாதுகாத்து வருவதாக சில சர்ச்சைகள் எழுந்தது. அதன் பின் தொடங்கப்பட்ட ஐந்தாவது சீசனில் செஃப் வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியில் இருந்து தானும் தாமுவும் விலகுவதாக அறிவித்தார். அதற்கு தாமு ஆட்சேபம் தெரிவித்தார். இப்படி சர்ச்சைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொண்டார். மேலும், முதன் முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மணிமேலை. அப்போது தான் மணி மேகலை, பிரியங்கா தன்னை வேலை செய்யவிடாமல் தடுப்பதாகவும், தனது வேலையில் மூக்கை நுழைப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு விட்டு விஜய் டிவியில் இருந்து வெளியேறினார். அந்த சீசன் 5- ல் வின்னராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸ் பிரபலம்: இதைத்தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாகவும் வி.ஜே.ரக்ஷன் தொகுப்பாரளாகவும் பங்கேற்க உள்ள நிலையில், போட்டியாளர்களாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்த சௌந்தர்யா கோமாளியாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இவரின் எதார்த்தமான பேச்சுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள், டிஆர்பி ரேட்டிங்குகளை அதிகரிக்க சேனல் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுனிதாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே சண்டை வெடித்தது. அதே போல, பிஆர்ஓக்கள் மூலம் சௌந்தர்யா வெற்றி பெற்றார் என்றும், இது எல்லாம் ஒரு வேலையா என கேள்வி எழுப்பி இருந்தார் சுனிதா. அப்படி இருக்கும் போது இருவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் சண்டை வெடிக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், சிவாங்கி, புகழ், பாலா, அஸ்வின் உள்ளிட்ட பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











