யாருக்கும் வாழ்க்கை ஈஸி இல்லை.. வாழ்க்கையே போராட்டம் தான்.. டென்ஷனான ஷிவாங்கியின் நச் பதில் !
சென்னை : ட்விட்டரில் தன்னை டென்ஷனாக்கிய இணையவாசிக்கு விஜய் டிவி சிவாங்கி கூலாக பதிலளித்துள்ளார்.
க்யூட்டான சிரிப்பு, வசீகரமான குரலுக்கு சொந்தக்காரியான சிவாங்கிக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. சின்னத்தில் கிடைத்த வரவேற்பால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் , கதாநாயகி மாளவிகா மோகனின் தோழியாக வெள்ளித்திரையில் கால் பாதித்தார்.
இந்த படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை வாரிக்குவித்தது. சிவாங்கி தற்போது ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது.

சிரிக்கவைக்கும் நிகழ்ச்சி
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். முதலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது சமையல் நிகழ்ச்சியில் கோமாளிக்கு என்ன வேலை என நினைக்க வைத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி பலரின் கவலையை மறந்து சிரிக்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.

உங்களுக்கு என்னப்பா
சிவாங்கி தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், சிவாங்கியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு இணையவாசி, உங்களுக்கு என்னப்பா ஒரு கம்பெனியில இன்டர்வியூவிற்க்கு போகனுமா.. வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எந்த டென்சனும் இல்லாத வாழ்க்கை. மிடில் கிளாஸில் இருக்கும் நாங்கள் கஷ்டத்தில் சிக்கி தவித்து வருகிறோம் என்றார்.

யார் வாழ்க்கையும் ஈஸி கிடையாது
இதற்கு பதில் அளித்த ஷிவாங்கி உங்க நிலை புரிகிறது, ஆனா எங்களுக்கும் நான் பண்ற ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு புடிக்குமா புடிக்காதான்னு ஒரு டென்சன் இருக்கும். புடிக்குமா பிடிக்க பிடிக்க வேலை பண்ணா தான் நாங்க இங்க இருக்கவே முடியும். இந்த வாழ்க்கையும் யார் வாழ்க்கையும் ஈஸி கிடையாது. இதில் பணக்காரன், மிடில் கிளாஸ், ஏழை எல்லாருக்கும் அவரவர் வாழ்கை ஒரு போராட்டம் இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











