Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக குக் வித் கோமாளி அடுத்தடுத்து நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சிறப்பான வெற்றியைப் பெற்று தொடர்ந்து கன்னடம், பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த ஷோவின் அடுத்த சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. கடந்த 4 சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட், தற்போது 5வது சீசனிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.

இந்த கேள்விக்கு பதிலாக தற்போது இந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் குறித்த பிரமோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இந்த ஷோ விஜய் டிவியில் தனது பயணத்தை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளவர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக நிகழ்ச்சியை தர்ஷன் தொகுத்து வழங்கிவந்த நிலையில், இந்த சீசனில் மணிமேகலை ஆங்கராக இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில தினங்களில் அனைத்தும் தெளிவாகிவிடும்.

Vijay TV s Cooku with comali 5 show s new promo released


குக் வித் கோமாளி ஷோ: விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் சீரியலுக்கு இணையான முக்கியத்துவத்தையும் பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகின்றன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ஆண்டுதோறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப் பெரிய என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்டு நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. சமையலுடன் காமெடியையும் இணைத்து ரசிகர்களுக்கு உற்சாகமான மனநிலையை தொடர்ந்து கொடுத்து வரும் இந்த நிகழ்ச்சியில் பல திறமைசாலிகள் வெளிப்பட்டு வருகின்றனர்.

நிகழ்ச்சியில் விலகிய வெங்கடேஷ் பட்: இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் கடந்த நான்கு சீசன்களில் இணைந்து சிறப்பான செயல்பாட்டை கொடுத்து வந்தனர். இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகியுள்ளார். அவர் விரைவில் மற்றொரு நிகழ்ச்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவின் அடுத்த சீசனில் செஃப் தாமுவுடன் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் இணைய உள்ளதாக முன்னதாகவே கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து காணப்படும் நிகழ்ச்சிக்கான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பார்ட்னருடன் வந்த தாமு: இருவரும் ஒருவர் பின் ஒருவராக விமானத்திலிருந்து இறங்கி வருவதாகவும் சிங்கம்தான் சிங்கிளாக வரும் ஆனால் தான் ஒரு செஃப் பார்ட்னருடன்தான் வருவேன் என்று இந்த பிரமோவில் தாமு கூறுவதாக காணப்பட்டது. தொடர்ந்து இது கலக்கல் கூட்டணி என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறுவதாகவும் பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து விரைவில் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதாகவும் இந்த பிரமோவில் கூறப்பட்டுள்ளது. இந்தப் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆங்கர் யார்?: இந்த நிகழ்ச்சியை தர்ஷன் தொகுத்து வழங்கிவரும் நிலையில் இந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்பது குறித்து கேள்விகளும் ரசிகர்களிடையே காணப்படுகின்றன. முன்னதாக கடந்த சீசனின் சில எபிசோடுகளை கோமாளி மணிமேகலை தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிலையில் இந்த ஐந்தாவது சீசனில் அவர் தொகுப்பாளராக மாறுவாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குக்குகள் மற்றும் கோமாளிகள் இணைந்து ரகளையான சமையலை கொடுத்த நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை என பலரும் அதிகமான புகழ் வெளிச்சத்தை பெற்று சினிமாவிலும் நடிக்கத் துவங்கியுள்ளனர்.

ஸ்ட்ரெஸ் பர்ஸ்டர் என பாராட்டு: முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும் இரண்டாவது சீசனில் கனியும் மூன்றாவது சீசனில் சுருதிகாவும் நான்காவது சீசனில் மைம் கோபியும் குக் வித் கோமாளியில் வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி தமிழில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு கவனத்தை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி அனைவருக்குமே சிறப்பான ஸ்ட்ரெஸ் பர்ஸ்ட்டராக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X