CWC 6: குக் வித் கோமாளி சீசன் 6: சன் டிவிக்கு டாடா.. விஜய் டிவிக்கு தாவிய நடுவர்.. யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி உள்ளது. இதில் இத்தனை ஆண்டுகளாக இரண்டு நடுவர்கள் இருந்த நிலையில் தற்போது, மூன்றாவதாக புது நடுவர் ஒருவர் களமிறங்கி உள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை கடந்த பின்பும் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விதவிதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து, அதை செய்ய விடாமல் தடுப்பதற்கு என்றே சில கோமாளிகளையும் கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் சமையலை விட, கோமாளித்தனம் தான் அதிகமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து பிரபலமானவர்கள் தான் குரேஷி, புகழ், சிவாங்கி இவர்களின் கலாட்டாவை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இருக்கும்.

குக் வித் கோமாளி: நான்கு சீசன்களாக சிறப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி, ஐந்தாவது சீசனில் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில், நான்கு சீசன்களாக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டு, சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு... டூப் குக்கு... என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார். இப்படி சர்ச்சையோடு ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு இருவரும் நடுவராக இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருந்தனர். இதில் போட்டியாளராக பிரியங்கா தேஷ்பாண்டே இருந்தார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். அதே போல, ஆரம்பத்திலேயே சர்ச்சையோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, குக்காக சமையல் வேலையை மட்டும் பார்க்காமல், தொகுப்பாளினி வேலையில் மூக்கை நுழைப்பதாக கூறி பாதியிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறினார்.
இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறினாலும், அதுபற்றி பிரியங்காவும் கவலைப்படவில்லை, விஜய் டிவியும் கவலைப்படாமல், குக் வித் கோமாளி சீசன் 5ன் வின்னர் பட்டத்தை பெற்றார் பிரியங்கா. சமைக்கவே தெரியாத பிரியங்கா எப்படி வெற்றி பெற்றார் என்றெல்லாம், விமர்சனம் வந்தன. ஆனால், காலப்போக்கில் அவை அனைத்தும் மறந்துபோய்விட்டது. தற்போது, நெட்டிசன்ஸ் பிரியங்காவின் திருமண வீடியோவை டிரெண்டாக்கி அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 6: இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், செஃப் தாமுவுடன், மாதம்பட்டி ரங்கராஜ் கை கோர்த்தபடி இருக்க, புது ஸ்கூல்.. புது ரூல்ஸ்...புது நடுவர் என கூறி புது நடுவரை அறிமுகப்படுத்தி உள்ளார். இத்தனை சீசன்களாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு நடுவர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது புது நடுவராக செஃப் கௌஷிக் களமிறங்கி உள்ளார். இவர், சன் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் டிவிக்கு தாவி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











