ஆனந்தயாழை பாடலை அடிக்கடி போட்டு ஆறுதல் தேடிய விஜய் டிவி
தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது விழாவில் சிறந்தபாடலாசியர் விருது நா.முத்துக்குமாருக்கும், சிறந்த பாடகர் விருது ஸ்ரீ ராம் பார்த்த சாரதிக்கும் கிடைத்தது.
இந்த விருது தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாள்... பாடலுக்காக கிடைத்த விருது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

ஆனந்தயாழை மீட்டுகிறாள்…
விருதுக்காக நா.முத்துக்குமாரின் பெயரும், ஸ்ரீராம் பார்த்தசாரதியின் பெயரும் அறிவிக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் ஆனந்தயாழை மீட்டுகிறாள் பாடலைப்போட்டு இயக்குநர் ராமுக்கு ஆறுதல் சொன்னார்கள் விஜய் டிவியினர்.

ராமின் ஆதங்கம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஜய் விருது விழாவில் தங்க மீன்கள் படத்தின் ஆனந்தயாழை பாடலுக்கும், அந்த படத்தில் நடித்த சிறுமிக்கும் விருது கொடுக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.

ஆறுதல் ஒளிபரப்பு
அந்த ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லும் விதமாக நேற்றைய தினம் பிலிம்பேர் விழாவை ஒளிபரப்பிய விஜய் டிவி ஆனந்த யாழை பாடலை அடிக்கடி ஒளிபரப்பியதோடு ராமின் முகத்தை அடிக்கடி காட்டினர்.

5 விருது வாங்கிய முத்துக்குமார்
ஆனந்தயாழை பாடலுக்காக தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது என 5 விருதுகளை பெற்றுள்ளதாக கூறினார் நா.முத்துக்குமார்.

பாடிக்காட்டிய பாடகர்
சிறந்த பாடலாசியருக்காக பரிசு வாங்கிய பாடகர் ஸ்ரீராம் பார்த்த சாரதி மேடையிலேயே அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார். அப்போது ராமின் முகத்தில் மலர்ந்த சந்தோசம் விருது வாங்கியதை விட அதிகமாகவே இருந்தது.


Click it and Unblock the Notifications