ஆஹா… இம்புட்டு அழகா இருந்தா எப்படி ‘டிடி‘… வச்ச கண் வாங்காம பார்க்கும் ரசிகர்கள் !
சென்னை : இந்த வயதிலும் என்ன அழகுடா என்று சொல்லும் அளவுக்கு டிடியின் லேட்டஸ்ட் புகைப்படம் டாப்பர் டூப்பராக வலம் வந்து கொண்டிருக்கிறது
தொகுப்பாளர்கள் எத்தனை பேர் புதுசு புதுசாக அறிமுகம் ஆனாலும் தொகுப்பாளர் என்று சொன்னதுமே முதலில் ஞாபகத்திற்கு வருவது டிடி தான் .
டிடி எனும் திவ்யதர்ஷினி என்ற பெயரைச் சொன்னதுமே அவருடைய படப்பட பேச்சும் நக்கலான ஜோக்குகளும் தான் நம் நினைவுக்கு வரும்,

அம்சமாக சேலையில்
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு" என்ற பாடலுக்கு ஏற்றபடி வாச மலரா பூத்து குலுங்குகிறார் திவ்யதர்ஷினி. இவரை பார்த்த பிறகுதான் உண்மையில் சேலையில் பெண்கள் இத்தனை அழகா என்ற எண்ணமே தோன்றுகிறது.

அட்டகாசமான போட்டோ
மாடர்ன் உடையில் போட்டோக்களை வெளியிட்டு வந்த டிடி, நீண்ட நாட்களுக்கு பிறகு புடவை அணிந்து தமிழ்நாட்டு அழகியாக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து திக்கு முக்காடிப்போன ரசிகர்கள், டிடியை வர்ணித்து கவிதைப்பாடி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

கலக்கும் டிடி
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளரான டிடி, முன்பு போல் ஏராளமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இல்லை. விஐபி நிகழ்ச்சிகள் மற்றும் பட ப்ரோமோஷன் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்திற்கான ப்ரோமோஷனின் போது, அவரை பேட்டி எடுத்திருந்தார். சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராஜமௌலி மற்றும் ஜூனியர் என்டியார் மற்றும் ராம்சரணுடன் கலக்கலாக பேட்டி எடுத்திருந்தார்.

மாஸ் காட்டிய டிடி
திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் டிடி, கௌதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் கதாநாயகனாக நடிக்கும் ஜோஸ்வா இமை போல் காக்க திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், துப்பாக்கியும் கையுமா மாஸ் காட்டி இருந்தார் டிடி. இப்படம் விரைவில் வெளியாக உ ள்ளது.


Click it and Unblock the Notifications











