அட.. அம்மாவை போலவே அழகு.. டிடியின் அழகுக்கு காரணம் இவங்கதான் !
சென்னை : சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் டிடி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர் திவ்யதர்ஷினி.
கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் அவரது ஸ்டைலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. பக்கா எண்டெர்டெய்னரான டிடிக்கு பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி பிரபலங்களுடனும் நல்ல நட்புறவை கொண்டுள்ளார் டிடி. நடிகை டிடி தனது தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.

டிடி தொகுப்பாளினி
நடிகை மற்றும் தொகுதிப்பாளியான டிடியை தெரியாதவர்களே இருக்க முடியாது. விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளர் யார் என்றால் அது டிடி தான். விசில், பா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.

ஷாருக்கானுடன்
டிடி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள டிடி அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா திருமணத்திற்கு சென்ற டிடி ஷாருக்கானை கட்டிபிடித்தபடி இருந்த போட்டோவை ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது.

ரன்பீர் கபூருடன்
அதேபோல ரன்பீர் கபூரின் ஷாம்ஷரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி ரன்பீர் கபூருடன் நெருக்கமாக செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிடி பான் இந்திய தொகுப்பாளினியாகிவிட்டதாக கூறிவந்தனர்.

அட என்ன அழகு
இந்நிலையில், டிடி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிடியின் இந்த அழகு அவங்க அம்மாகிட்ட இருந்துதான் வந்தா என ரசிகர்கள் அவரை அவரது அம்மாவையும் புகழ்ந்து வருகின்றனர்.சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படம் டிராண்டாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











