சேனலின் செல்லப்பிள்ளை சிவகார்த்திக்கேயன்… விஜய் டிவியில் ஓவர் டோஸ் ஆயிருச்சே!

By Mayura Akilan

தை திருநாள் தினத்தன்று தொலைக்காட்சி சேனல்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார் சிவகார்த்திக்கேயன். கலைஞர் டிவியில் சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ஒளிபரப்பினார்கள்.

விஜய் டிவியில் எங்க வீட்டுப் பிள்ளை என்று சிவகார்த்திக்கேயனின் பேட்டியும், ஜெயாடிவியில் அதே போல சிறப்பு பேட்டியும் ஒளிபரப்பானது.

எல்லாம் சரிதான். ஆனால் விஜய் டிவியில் கலந்து கொண்ட பெண்கள் சிவகார்த்திக்கேயனிடம் நடந்து கொண்ட முறைதான் விமர்ச்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

விஜய் தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திக்கேயன். மெரினா திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்குப் போய் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை

சிவகார்த்திக்கேயனின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயனை பெருமைப் படுத்துகிறோம் என்று கூறி கேவலப்படுத்தியதுடன் நமது கலாச்சாரத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

ஊட்டிவிட்ட சிவகார்த்திக்கேயன்

ஊட்டிவிட்ட சிவகார்த்திக்கேயன்

இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெண் பொங்கல் ஊட்டிவிட்டு விட்டு தனக்கும் ஊட்டிவிடு என்று அடம்பிடித்தார். இன்னொரு ரசிகையோ முறுக்கு மீசை வைத்துப் பார்த்தார்.

கன்னத்தைக்கிள்ளி....

கன்னத்தைக்கிள்ளி....

ஒரு ரசிகையோ கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று சொல்லி கிள்ளி... தொகுப்பாளினியில் வேண்டுதலுக்காக மீண்டும் ஒருமுறை கிள்ளினார். உடனே நான் மட்டும் கிள்ளினேன்... நீங்க என் கன்னத்தைக் கிள்ளுங்க என்று கூற சிவகார்த்திக்கேயனும் அந்தப் பெண்ணின் கண்ணத்தை கிள்ளினார்.

ஆபாசத்தின் உச்சம்

ஆபாசத்தின் உச்சம்

இதற்கெல்லாம் உச்சமாக ஒரு பெண் கேட்ட கேள்வியும், அதற்கு சிவகார்த்திகேயன் சொன்ன பதிலும் அதற்கு அவர்களும் தொகுப்பாளினியும் அளித்த பதில் என ஆபாசத்தின் உச்சம்.

என்ன கொடுமை சார்?

என்ன கொடுமை சார்?

கேள்வி கேட்ட பெண் சிவகார்த்திகேயன் சரியான பதிலைச் சொல்லவில்லை எனச் சொல்லி அதற்குத் தண்டனையாக தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றி வர வேண்டும் என்று விடாப்பிடியாக சொல்ல... அதற்கு சிவகார்த்திக்கேயன் மறுக்க உடனே ஒரு பனியனில் லிப்ஸ்டிக் உதடை பதிய வைத்து அதை அணிந்து கொள்ளச் சொல்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?

வளர்ந்து வரும் நடிகருக்கு தேவையா?

வளர்ந்து வரும் நடிகருக்கு தேவையா?

சிவாவைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் இதை எல்லாம் ஒரு விழா நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் செய்ய எந்த அளவிற்கு ஒத்துக் கொண்டார் என்பதுதான் தெரியவில்லை.

விஜய் டிவிக்கு புதிதில்லை

விஜய் டிவிக்கு புதிதில்லை

இது போல நடிகர்களின் புகழ் பாடி பெண்களை நடிகர்களின் பின்னால் அலைபவர்களாக காட்டுவது ஒன்றும் விஜய் டிவிக்கு புதிதில்லைதான். கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சூர்யாவின் புகழை பாடும் பெண்களாக சித்தரித்தனர்.

கமலிடம் முத்தம்

கமலிடம் முத்தம்

விஜய் டிவியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசனை அவரது மகள் வயதுடைய தொகுப்பாளினி திவ்யதர்ஷிணி கட்டிப்பிடித்து முத்தம் வேண்டும் என கேட்டு முத்தம் வாங்கினார்.

டிஆர்பியை உயர்த்த...

டிஆர்பியை உயர்த்த...

இங்கு நிகழ்ச்சியை நடத்தும் பெண்களுக்கு வேண்டுமானால் டிஆர்பிக்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கலந்து கொள்ளும் பெண்கள் எப்படி வரம்பு மீறினார்கள் என்பதுதான் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் கேள்வியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X