ஐபிஎல் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற நாஞ்சில் விஜயன்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
சென்னை விஜய்டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் ஐபிஎல் டிக்கெட்டை பிளாக்கில் விற்று தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
விஜய் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.
நாஞ்சில் விஜயன் : நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயனுக்கு பெண் வேடங்கள் பக்காவாக பொருந்தி இருக்கும் என்பதால், பெரும்பாலும் பெண் வேடத்திலேயே நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றுவார். இவரின உடல் மொழிக்கும் , இவரின் பேச்சை ரசிப்பதற்கும் என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
பிரச்சனையில் சிக்கினார் : சின்னத்திரையில் பிரபலமான நாஞ்சில் விஜயன், தற்போது வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமான இவர், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சூர்யா தேவி, வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதை கடுமையாக விமர்சித்து பேசினார்.
கைதானார் : இதையடுத்து, வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் பேச அது பெரிய பஞ்சாயத்தாகவே மாறிவிட்டது. பின் உருட்டுக்கட்டையால், அடித்துவிட்டதாகவும், தரக்குறைவான வார்த்தையால் திட்டியதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி புகார் கொடுக்க போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

கண்ணீர் பேட்டி: சிறையில் இருந்து வெளியே வந்த நாஞ்சில் விஜயனுக்கு விஜய் டிவியில் முன்பு போல நிகழ்ச்சி இல்லாததால், தனது யூடியூப் சேனலில் ஏதாவது வீடியோவை வெளியிட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், அம்மா சிறுவயதிலேயே இறந்து விட, பாரில் வேலை செய்து கொண்டேபடித்தாகவும் பெரியம்மா தான் வளர்ந்ததாகவும் கூறியிருந்தார்.
பிளாக்கில் டிக்கெட் விற்றார் : இந்நிலையில், நாஞ்சில் விஜயன் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஆதாவது CSK Vs DC அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை 1500 ரூபாய்க்கு வாங்கி, பிளாக்கில் 6500 ரூபாய்க்கு தற்போது தெரியவந்துள்ளது. இதனால், நாஞ்சில் விஜயன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.


Click it and Unblock the Notifications











