நான் அப்படிபட்ட பொண்ணு இல்லை.. கூல் சிவாங்கியவே கடுப்பேத்திட்டாங்களே.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர பல சின்னத்திரை பிரபலங்கள் நாள்தோறும் முயற்சி செய்து கொண்டு உள்ளார்கள். இதில் பலர் வெற்றி அடைகிறார்கள், பலரது முயற்சிக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது எனலாம். அப்படி சின்னத்திரையில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ள, பாடகி, நடிகை, காமெடியன் என பல அடையாளங்களை வைத்துள்ள சிவாங்கி குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் சமீபகாலமாக இணையத்தில் உலா வருகிறது. அதற்கு சிவாங்கி பளார் விட்டது போல பதில் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடகியாக வேண்டும் என்ற கனவோடு கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார் சிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல கட்ட போட்டிக்குப் பிறகு, சிவாங்கி எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் சிவாங்கி தான் வந்த எபிசோடுகளில் அவரது குறும்புத்தனம் மற்றும் அவரது டைமிங் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் இவரை நிலை நிறுத்தியது.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஸ்டாராக அவதாரம் எடுத்தார் சிவாங்கி. தனக்கு கிடைக்கும் சினிமா வாய்ப்புகளில் சிவாங்கி நடித்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சிவாங்கி நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஏற்றாற்போல் வரும் கதாபாத்திரங்களில் சிவாங்கி தொடர்ந்து நடித்து வருகிறார்.

Vijay TV Fame Sivaangi Krishnakumar Slams Who Posted Bad Comments On Her Instagram Posts

சிவாங்கி: இது மட்டும் இல்லாமல், விஜய் டிவி நிகழ்ச்சிகள் சிவாங்கி தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். பாடகியாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவோடு வந்திருந்தாலும், வாழ்க்கை இப்போது அவருக்கு நடிகை என்ற பக்கத்தையும் திறந்து வைத்துள்ளதால், சிவாங்கி இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பாடி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் செம ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இதனால் தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

Take a Poll

இன்ஸ்டாகிராம்: சிவாங்கியை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இப்படி இருக்கும்போது, சிவாங்கி சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் மாடர்ன் உடைகளை உடுத்தி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனைப் பார்த்த இணையவாசிகள் சிலர் சிவாங்கி சினிமா வாய்ப்புக்காகத்தான் எப்படி எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் என விமர்சித்தார்கள்.

Vijay TV Fame Sivaangi Krishnakumar Slams Who Posted Bad Comments On Her Instagram Posts

பதிலடி: தன் மீதான இந்த விமர்சனங்களுக்கு சிவாங்கி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பளார் விடும் படியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, " சமூக வலைதளங்களில் தனது போஸ்டுக்கு சிலர் மோசமாக கமெண்ட் அடிப்பார்கள், அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது. நான் மாடர்ன் உடை போட்ட போது வாய்ப்புக்காக ஆடையை குறைத்து விட்டேன் என்றும், சிவாங்கி சினிமா வாய்ப்புக்காக இப்படி அவுத்து போட்டுவிட்டு திரியிற என்றெல்லாம் சிலர் என்னை திட்டினார்கள். ஆனால் வாய்ப்புக்காக வெல்லாம் நான் அப்படி செய்யவில்லை. முன்பு நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன் அப்போது மாடர்ன் உடை எனக்கு செட்டாகாது என்பதால் அணியவில்லை. இப்போது உடல் எடையை குறைத்துள்ளேன். அதனால் எனக்கு மாடர்ன் உடைகளை அணிய வேண்டும் என்கிற ஆசை உள்ளதால் அணிந்து புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளேன் அவ்வளவுதான்" என பதில் அளித்துள்ளார். அவரது பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X