என்ன சொல்றீங்க ராஜமாதா பிக் பாஸ் 5ல கலந்துக்க போறாங்களா? விஜய் டிவி தீவிர பேச்சுவார்த்தை!

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கப் போகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி மற்றும் எண்ட்மோல் ஷைன் இந்தியா திட்டமிட்டு இருக்கிறதாம்.

இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனை பிக் பாஸ் 5க்கு வரவழைக்க விஜய் டிவி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டிஆர்பி கிங்

டிஆர்பி கிங்

எப்போதுமே ரியாலிட்டி ஷோக்கள் டிஆர்பி கிங்காகவே உள்ளன. கோடீஸ்வரன், தங்க வேட்டை, ஜாக்பாட் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் பல ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்து வந்திருக்கின்றன. வெளிநாட்டு நிகழ்ச்சியான பிக் பாஸ் இந்தியாவுக்குள் முதலில் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து தற்போது தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

சிகப்பு கம்பளம்

சிகப்பு கம்பளம்

கிசுகிசுக்களையே விரும்பி கேட்கும் மக்களுக்கு அடுத்தவங்க வீட்டு பெட்ரூம், பாத்ரூம், கிச்சன் என பல அந்தரங்க விஷயங்களை பல கேமராக்களை ஓடவிட்டு பார்வையாளர்களுக்கு காட்டினால் ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள். மேக்கப் போட்டு நடிகர்களாக பார்த்தவர்களின் ரியல் முகங்களை பார்த்த பிறகு அவர்கள் குறித்த அபிப்ராயங்கள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரு பிரிவுகளாக மக்கள் மத்தியில் பதிகின்றன.

அது தான் வெற்றி

அது தான் வெற்றி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியே அது தான். அதிலும், சர்ச்சைக்குரிய பிரபலங்களை ஒரே வீட்டுக்குள் விட்டு வார வாரம் அவர்களுக்குள் சிறந்தவர்கள் யார், போரிங் யார் என தேர்வு செய்ய வைத்து, ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்து ஒவ்வொருத்தருக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தி சண்டையை மூட்டி விட்டு டிஆர்பியை எகிற வைத்து வருகின்றனர்.

மக்களும் பங்கேற்பு

மக்களும் பங்கேற்பு

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியையே ஓட்டு மூலம் மக்களுக்கு கொடுக்கிறோம் என ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி நிகழ்ச்சி நடத்துபவர்கள் போடும் நாடகத்தை நம்பி மக்களும் ஓட்டுப் போட்டு வருகின்றனர். சில சமயங்களில் மக்களின் தீர்ப்பை மதித்தே ஆகும் அளவுக்கு நிகழ்ச்சியாளர்களும் தள்ளப்படுவதில் அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதால் ஸ்க்ரிப்டடா இல்லையா? என்கிற கெஸ்சிங் கேமிலேயே பிக் பாஸ் மிகப்பெரிய வெற்றியை சந்தித்து வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

கடந்த ஆண்டை போலவே கொரோனா வைரஸ் இந்த ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தாமதமாக்கி விட்டது. வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான பணிகளும் ஆரம்பமாகி விட்டதாகவும், போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகிறது.

ரம்யா கிருஷ்ணன் வருவாரா

ரம்யா கிருஷ்ணன் வருவாரா

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்வார் என்கிற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக செயலாற்றி வரும் ரம்யா கிருஷ்ணனை பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்க செய்ய விஜய் டிவி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

போட்டியாளரா? தொகுப்பாளினியா?

போட்டியாளரா? தொகுப்பாளினியா?

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார். பிக் பாஸ் சீசன் 5ல் அவர் கலந்து கொண்டால், போட்டியாளரா? அல்லது தொகுப்பாளினியா? என மிகப்பெரிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கமல் இருக்கிறாரே

கமல் இருக்கிறாரே

பிக் பாஸ் சீசன் 5க்கும் தொகுப்பாளராக கமல்ஹாசன் இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விக்ரம் வெற்றிமாறன் படம் என அவரும் அடுத்தடுத்து பிசியாகும் வாய்ப்பு இருப்பதால் ரம்யா கிருஷ்ணனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டு வருகிறது.

வீட்டுக்குள் நுழைந்தால்

வீட்டுக்குள் நுழைந்தால்

ஹோஸ்ட்டாக இல்லாமல் கன்டெஸ்ட்டண்டாக ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்குள் நுழைந்தால் டிஆர்பி ரேட்டிங் இன்னமும் அதிகரிக்கும் என்றும் டைட்டிலும் அவருக்கு கொடுக்கப்படும் என்றும் இப்போதே அனுமானங்கள் அதிகரித்து வருகின்றன. ராஜமாதா ரம்யா கிருஷ்ணனுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் மிகப்பெரியது என்பது அனைவரும் அறிவர்.

வனிதாவுக்கே அக்கா

வனிதாவுக்கே அக்கா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் வனிதா விஜயகுமார் மெஜாரிட்டியாக இருந்து மற்ற போட்டியாளர்களை கலங்கடித்து வந்தார். அவருக்கு கிடைத்த எக்ஸ்போஸ் காரணமாக விஜய் டிவியில் தொடர்ந்து ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு நன்றாக சம்பாதித்தார். ஆனால், வனிதா விஜயகுமாரையே ஓரங்கட்ட நீலம்பரி ரம்யா கிருஷ்ணனை களமிறக்கி விஜய் டிவி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

கடும் போட்டி

கடும் போட்டி

சன் டிவியில் மாஸ்டர் செஃப், ஜீ தமிழில் சர்வைவர் மற்றும் விஜய் டிவியிலேயே குக் வித் கோமாளி என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் போட்டிக்கு வந்து விட்ட நிலையில், இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களின் தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்தது. எண்ட்மோல் ஷைன் இந்தியா வழக்கமாக விஜய் டிவி செல்லப் பிள்ளைகளையே வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவதை போலவே இந்த ஆண்டும் அதிக பேரை சேர்த்துக் கொண்டால் பிக் பாஸ் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தனது செல்வாக்கை நிச்சயம் இழக்க நேரிடும் அபாயமும் இருப்பது அந்த குழுவுக்கே நன்றாக தெரிந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X