Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகளே உயிராக... உலகே அவளாக... விஜய் டிவியில் புதிய சீரியல்... இன்று முதல் ஒளிபரப்பு!
சென்னை : நிகழ்ச்சிகளை போலவே சீரியல்களில் முழு கவனம் செலுத்தி வருகிறது விஜய் டிவி. புதிய புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி என விஜய் டிவியில் சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
என்னங்க
சொல்றீங்க...அதுக்குள்ள
தளபதி
66
ஷுட்டிங்
முடிஞ்சுடுச்சா
?

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியில் பிக் பாஸ், பிக்பாஸ் ஜோடிகள், குக் வித் கோமாளி என நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கவரும்வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து வரும் இந்த சேனல் இந்த நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டுவருகின்றன.

புத்தம்புதிய சீரியல்கள்
புத்தம் புதிய நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சீரியல்களிலும் முக்கியமான இடத்தை விஜய் டிவி பிடித்துள்ளது. வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான தொடர்கள்மூலமும் ரசிகர்களை தொடர்ந்து தங்களது சேனலை பார்க்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்க்ள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

இரண்டாவது சீசன்கள்
இந்த தொடர்களின்மூலம் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் புதிய புதிய தொடர்களை களமிறக்கி வருகிறது. அடுத்தடுத்து பழைய தொடர்களின் இரண்டாவது சீசன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த தொடர்களும் அதன் புதிய சீசன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

செல்லம்மா புதிய தொடர்
அந்த வகையில் தற்போது சில சீரியல்களின் இரண்டாவது சீசன்களை துவக்கியுள்ள விஜய் டிவி, புதிதாக செல்லம்மா என்ற புதிய தொடரையும் ஒளிபரப்ப உள்ளது. இன்று முதல் இந்த தொடர் தனது ஒளிபரப்பை துவங்கியுள்ளது. இந்தத் தொடரின்மூலம் ஒற்றைத் தாயின் வலி மற்றும் வேதனைகளை பதிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய ப்ரமோ வெளியீடு
இதற்கான பிரமோவை அடுத்தடுத்து விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. இதில் தனது பெண்குழந்தை சைக்கிள் கேட்டதற்காக சைக்கிள் பந்தயத்தில் அவருடைய தாய் கஷ்டப்பட்டு மூன்றாவதாக வந்து தன்னுடைய குழந்தை கேட்கும் குட்டி சைக்கிளை அவளுக்கு பரிசாக அளிக்கிறாள். இவ்வாறு அந்த ப்ரமோ சிறப்பாக காணப்படுகிறது.

குழந்தையுடன் ஆட்டம்
மேலும் இந்த சீரியலுக்கான அடுத்த பிரமோவின் தன்னுடைய குழந்தையுடன் ஆடிப்பாடுகிறாள். இதற்கென பாடல் ஒன்றையும் புதிய ஏற்படுத்தியுள்ளனர். மகளே உயிராக, உலகே அவளாக என்று அந்த பாடல் காணப்படுகிறது. தினந்தோறும் பிற்பகல் 2 மணிக்கு இந்த புதியத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக உள்ளது.

ஒற்றைத் தாயின் வலிகள்
இந்த செல்லம்மா ஒற்றைத் தாயின் வலியை கூறவுள்ள நிலையில், முன்னதாக நேற்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி ஒற்றைத் தாய்களின் வலிகளை பதிவு செய்யும்வகையில் வீடியோ ஒன்றை ஏற்படுத்தி அதை வெளிப்படுத்தியுள்ளது விஜய் டிவி. இதன்மூலம் செல்லம்மா தொடரை பிரமோட் செய்துள்ளது.