Don't Miss!
- News
திருக்குறளை கூட சலுகை என நினைத்து விட்டாரோ.. 'எந்த விதத்திலும் உதவாத பட்ஜெட்'.. தொல். திருமாவளவன்
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ராஜூ வூட்ல பார்ட்டி.. சேட்டைக்கார பார்ட்டி.. விஜய் டிவியின் புதிய கலக்கல் நிகழ்ச்சி!
சென்னை : விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த வித்தியாசமான நிகழ்ச்சிகளை களமிறக்கி தொடர்ந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது இந்த சேனல்.
இந்நிலையில் அடுத்ததாக புதிய நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி
விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் மிகவும் வித்தியாசமான வகையில் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன. இந்த சேனலின் நிகழ்ச்சிகளுக்காகவே ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் வரிசையில் புதிய புதிய நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் சில தினங்களில் நிறைவுக்கு வரவுள்ளது. இதற்கான இறுதிப்போட்டியின் சூட்டிங்கும் நிறைவடைந்து விட்டதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது.

ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கட்டிப் போடுவதற்கு முன்பாக தன்னுடைய புதிய நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை மையப்படுத்த புயலாக கிளம்பியுள்ளார் பிக்பாஸ் புகழ் ராஜூ. ராஜூ வூட்ல பார்ட்டி என்ற இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது.
|
கலக்கல் ப்ரமோ
இதில் ராஜுவுடன், தீபா, சுனிதா, பிரியங்கா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் இணைந்து அவருடன் பார்ட்டி மூடில் ஆடுகின்றனர். இதில் கலக்கலான காமெடி உள்ளிட்ட பல விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ப்ரமோவில் பிரியங்கா உள்ளிட்டவர்கள் அதிரடி காட்டுகின்றனர்.

டைட்டில் வின்னர்
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ராஜூ. கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற நிலையில், தொடர்ந்து தன்னுடைய செயல்பாடுகளால் அனைவரையும் கவர்ந்து, டைட்டிலையும் வென்றார். டான் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.