இது தாங்க மய்யம்: கமல் வேலை செய்வது தெரிந்தும் பிக் பாஸை விளாசிய ஸ்ரீ ப்ரியா

By Siva

Recommended Video

யாஷிகா எவிக்ஷன் பற்றிய உங்கள் கருத்து என்ன?- வீடியோ

சென்னை: யாஷிகா வெளியேற்றப்பட்டதில் பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல பிரபலங்களுக்கும் வருத்தம் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பிக் பாஸ் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து அவரை காப்பாற்றிவிடுகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த யாஷிகா நேற்று வெளியேற்றப்பட்டார்.

யாஷிகா

யாஷிகா

ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்படுகிறார். இந்த வாரமும் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து யாஷிகா வெளியேற்றப்பட்டார். தன்னை தான் வெளியேற்றப் போகிறார்கள் என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. அதனால் தான் அவர் கண்ணாடியில் பிக் பாஸுக்கு நன்றி தெரிவித்து எழுதினார், ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யுமாறு கமல் கூறியபோது பேசிவிட்டு நான் கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.

ஸ்ரீ ப்ரியா

சத்ய பிரகாஷ் சூப்பர் சிங்கர் பட்டத்தை வெல்லாதபோது, இந்த சீசனில் ஸ்ரீகாந்த் வெற்றி பெறாதபோது என்று விஜய் டிவி என்னை பலமுறை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதே போன்று யாஷிகா வெளியேற்றப்பட்டதாலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று ட்வீட்டி கோபமாக இருக்கும் ஸ்மைலியை போட்டுள்ளார் நடிகையும், மக்கள் நீதி மய்யம் உறுப்பினருமான ஸ்ரீ ப்ரியா.

எதிர்பார்க்கவில்லை

பிக் பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா வெளியேற்றப்பட்டதை எதிர்பார்க்கவில்லை என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

அடுத்த பலி

யாஷிகா இருந்திருக்க வேண்டும்.. அடுத்த பலி. பாவம் என்று ட்வீட்டியுள்ளார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி.

உளறல்

காஜலின் ட்வீட்டை பார்த்த ஐஸ்வர்யா ஆதரவாளர் ஒருவர் உளற அதை பார்த்த அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, யஷ் இல்லன்னா உங்க ஐஸ் இல்லீங்க. யஷ் மாஸ்டர்மைன்ட் செய்தார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவர் அனைத்து டாஸ்குகளையும் நன்றாக செய்தார், ஐஸை விட சிறப்பாக செய்தார். இது என் கருத்து. கருத்துகள் வேறுபடலாம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X