ஆள விடுங்கப்பா சாமி.. நான் பிக் பாஸ் வீட்டுக்கே போகல.. உஷாரான விஜய் டிவி பிரபலம்.. யாரு தெரியுமா?
சென்னை: விரைவில் விஜய் டிவியில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கடந்த சீசனை போலவே இந்த முறையும் அதிகளவில் விஜய் டிவி புராடக்ட்களே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில வெளியாட்கள் பெயர்களும் நிகழ்ச்சியில் அடிபட்டு வருகின்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்கிற தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிக்பாஸுக்கு போகல
பிக் பாஸ் சீசன் 5ல் ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பிரியங்கா உள்ளிட்ட பெயர்கள் முதல் கட்டமாக அடிப்பட்ட நிலையில், இந்த மூவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்கிற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த சீசனின் டஃப் போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்காவிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அர்ச்சனாவுக்கு நேர்ந்தது
கடந்த சீசனில் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியே அன்பு குரூப் நிகழ்ச்சியாக மாற்றி விட்டார் என கடும் ட்ரோல்களுக்கு ஆளானார். அதே நிலைமை தான் பிரியங்காவுக்கும் ஏற்பட போகுது என பலரும் இவர் பெயர் அடிபட்ட போதே எச்சரிக்க ஆரம்பித்தனர்.

பிரியங்கா எஸ்கேப்
இந்நிலையில், இந்த சீசனில் நிச்சயம் பிரியங்கா கலந்து கொள்வார் என பல தரப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த சீசனுக்கு வேண்டாம் வேண்டுமென்றால் அடுத்த சீசனுக்கு வர முயற்சிக்கிறேன் என நாசுக்காக எஸ்கேப் ஆகி விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.

எப்பவுமே ஹாப்பி
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என ஏகப்பட்ட விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தேஷ்பாண்டே எப்பவுமே ஹாப்பியாகவும் ஜாலியாகவும் இருப்பவர். தன்னை கலாய்ப்பவர்களையும் கவுன்ட்டர்களை போட்டு கலாய்த்து தள்ளும் பிரியங்கா உள்ளே வந்தால் நல்லா இருந்துருக்கும் என்றும் ரசிகர்கள் தற்போது ஃபீல் பண்ணி வருகின்றனர்.

குக் வித் கோமாளி புரமோஷனா
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ போத்தீஸ் விளம்பரம் போல இருந்ததாக கலாய்த்த நெட்டிசன்கள், நேற்று வெளியான இரண்டாவது புரமோவை பார்த்து விட்டு என்ன ஆண்டவர் குக் வித் கோமாளி சீசன் 3க்கு புரமோஷன் செய்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.

குவாரண்டைன் இல்லையா
கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் தனியாக ஒரு ஹோட்டலில் 15 நாட்கள் அடைத்து வைத்து தனிமைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால், இந்த முறை அப்படி யாரையும் குவாரண்டைன் செய்யப்படவில்லை என தெரிகிறது. நமிதா மாரிமுத்து உள்ளிட்ட கன்ஃபார்ம் போட்டியாளர்கள் என பெயர் அடிபடும் போட்டியாளர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டிலேயே நடத்திய போட்டோஷூட்களும் வைரலாகி வருவதால் இந்த முறை குவாரண்டைன் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.

கட்டாயம் தடுப்பூசி
ஆனால், அதற்கு பதிலாக பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உத்தரவு போடப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு விட்டால் கூட போதும், இரண்டாவது டோஸ் ஊசியை பிக் பாஸ் வீட்டுக்குள்ளே கூட போட்டுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











