சரவணனை அழைத்துவந்து அசிங்கப்படுத்திய பிக்பாஸ்! கவினை விட்டு வைத்திருப்பது ஏன்?

சென்னை: சரவணனை அழைத்து வந்து பிக்பாஸ் அசிங்கப்படுத்திவிட்டதாக பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன், கல்லூரி காலத்தில் தான் பெண்களை உரசவே பேருந்தில் சென்றதாக கமல் முன்பு கடந்த 27ஆம் தேதி கூறினார். இதுதொடர்பாக நிகழ்ச்சி வாயிலாக சரவணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

அதோடு இந்த பிரச்சனை தீர்ந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சரவணனை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், அந்த பிரச்சனையை காரணம் காட்டி நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என்றும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும் கூறினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதைத்தொடர்ந்து சரவணன் கன்ஃபெஷன் ரூமிலிருந்து அப்படியே வெளியேற்றப்பட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முகம் மாறிவிட்டது

முகம் மாறிவிட்டது

ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூட சொல்ல விடாமல் அப்படியே சரவணனை வெளியேற்றிவிட்டனர். பிக்பாஸ், நிகழ்ச்சியில் தொடரக்கூடாது என்றதுமே சரவணன் முகம் மாறிவிட்டது.

சரவணன் அறிவுரை

சரவணன் அறிவுரை

சரவணன் சிறு வயதில் செய்த தவறை கூறி மற்றவர்கள் அப்படி செய்யக்கூடாது என்று தான் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதல் என்னைப்போல் யாரும் இருக்காதீர்கள், காசு பணம் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் அறிவுரை கூறி வந்தார்.

அப்போது அனுப்பவில்லை

அப்போது அனுப்பவில்லை

இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் உள்ளனர். பிரச்சனை வந்து விடப்போகிறது, என்னை விட்டுவிடுங்கள் நான் போகிறேன் என்று பலமுறை கூறியும், அவரை அனுப்பவில்லை பிக்பாஸ். இந்நிலையில் அந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்ட பிறகும், அதனை மீண்டும் கிளறி சரவணனை பிக்பாஸ் வீட்டிலிருந்து அனுப்பியுள்ளனர்.

கவின் மீது நடவடிக்கை?

கவின் மீது நடவடிக்கை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி ஒன்றும் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படவில்லை. ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலித்தால் பிரச்சனை வராது என்று நான்கு பேரை காதலித்தேன் என கமலிடம் நேரடியாக கூறிய கவின் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கவினை மட்டும் வச்சுருக்கீங்க?

கவினை மட்டும் வச்சுருக்கீங்க?

தனது சுயநலத்துக்காக பெண்களின் உணர்வுகளோடு விளையாடுவது மட்டும் சரியா? எப்போதோ செய்த காரணத்திற்காக சரவணனை இப்போது அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பிய பிக்பாஸ், தற்போதும் பெண்களின் உணர்ச்சிகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் கவினை மட்டும் வைத்திருப்பது ஏன்?

கண்ட இடத்தில் கை வைத்து

கண்ட இடத்தில் கை வைத்து

பிக்பாஸ் முதல் சீசனில் மருத்துவ முத்தம் என்று கூறி ஓவியாவுக்கு முத்தம் கொடுத்து, அவரை மனநிலை பாதிக்கும் அளவுக்கு காயப்படுத்திய ஆரவை டைட்டில் வின்னராக்கினீர்களே அதற்கு பெயர் என்ன? இரண்டாவது சீசனில், மஹத்தும் ஷாரிக்கும் செய்யாத காரியமா, பெண்களை போகப்பொருளாகப் பார்த்து கண்ட இடத்தில் கை வைத்து தடவியதை கண்டுக்கவேயில்லையே பிக்பாஸ்.

யாருடைய தவறு?

யாருடைய தவறு?

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த மனிதரை அழைத்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துவிட்டு, அவர் பேசியதை எடிட் செய்யாமல் அப்படியே போட்டது யாருடைய தவறு? எத்தனையோ விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுதான் ஒளிபரப்பப்படுகிறது.

அசிங்கப்படுத்தி அனுப்புவது நியாயமா?

அசிங்கப்படுத்தி அனுப்புவது நியாயமா?

அப்படி இருக்கையில் சரவணன் விஷயத்தை அப்படியே ஒளிபரப்பியதன் நோக்கம் என்ன? தனது டிஆர்பிக்காகவும் விளம்பரத்திற்காகவும் சரவணனை அழைத்து வந்து, நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட பிறகும் இப்படி பலிகடவாக்கி அசிங்கப்படுத்தி அனுப்புவது நியாயமா? அன்றே அனுப்பியிருந்தால் கூட இந்தளவுக்கு தெரிந்திருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X