ஏழைங்கனா இளக்காரமா.. 500 ரூபாய் பெட் கட்டி விளையாட்டு.. தொகுப்பாளினி ஜாக்குலினை விளாசும் ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினை சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். ஏழை மக்களிடம் இப்படியா 500 ரூபாய் பெட் வச்சு விளையாடுவது? என கேள்விகளால் விளாசி எடுத்து வருகின்றனர். அப்படி ஜாக்குலின் பண்ண விஷயம் என்ன? அதற்கு நெட்டிசன்கள் கொடுத்து வரும் பதிலடி என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

விஜய் டிவி தொகுப்பாளினியாக இருந்த ஜாக்குலின் தேன்மொழி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு நடித்த கோலமாவு கோகிலா படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் தங்கையாகவும் இவர் நடித்திருந்தார். அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்காத ஜாக்குலின் யூடியூப் சேனலில் அடிக்கடி டூர் போகும் வீடியோக்களையும் எதையாவது டிரெண்ட் பண்ண சில வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

Tv Jacqueline vijay tv


இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், ஜோமேட்டோ மற்றும் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்து விட்டு யார் சீக்கிரம் வராங்கன்னு போட்டி வைத்து விளையாடியதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

பெட் கட்டி விளையாட்டு: ஜோமேட்டோ மற்றும் ஸ்விக்கியில் ஒரே நேரத்தில் இரு மொபைல்களில் ஆர்டர் போட்டு விட்டு யார் சீக்கிரம் உணவு டெலிவரி பண்றாங்களோ அவங்களுக்கு 500 ரூபாய் பணம் தரப் போகிறேன் என ஜாக்குலின் சொல்லி விட்டு ஒரு செகண்ட் முன்னர் வந்த ஜோமேட்டோகாரருக்கு காசு கொடுக்க முன் வர அவர் சொன்ன வார்த்தைகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், ஜாக்குலினை திட்டவும் அதுவே காரணமாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவை அப்படியே இங்கே பார்ப்போம்.

விளாசிய நெட்டிசன்: ”கண்டென்ட் & வியூஸ்க்கு என்னா வேணாலும் பண்ணுவாங்க போல.. Swiggi, Zomoto ல ஒரே நேரத்துல ஆர்டர் போட்டு, யார் முதல்ல டெலிவரி பண்றாங்களோ, அவங்களுக்கு 500 ரூபா தர்ற மாதிரி கேம்.. பணம் ஒருத்தருக்கு, விளையாட்டு பொருளா இருக்குறதும், இன்னொருத்தர் அதுக்காக நாயா, பேயா ஓடுறதும் இந்த வீடியோ பாத்தா புரியும்..‌

Swiggy ய விட ஒரு செகண்ட் ZOMOTO காரர் முதல்ல வந்ததால, அவருக்கு 500 ரூபா கொடுக்கனும்னு சொன்னப்ப, அவர் சொன்ன பதில்தான் இங்க முக்கியமானது.. நான் பேச்சலர், பின்னாடி வந்தவர், ஃபேமிலி மேனா கூட இருக்கலாம், அவருக்கு குடுங்க னு சொன்னார்..

இல்ல இல்ல, நீங்க தான் முஇல்ல இல்ல, நீங்க தான் முதல்ல வந்தீங்க, உங்களுக்கு தான் குடுக்கனும்னு சொன்னப்ப, இல்ல நான் பக்கத்துல இருந்து தான் வந்தேன், அதனால சீக்கிரம் வந்துட்டேன்...அவர் தூரமா இருந்து வந்திருப்பார்.. அதனால லேட் ஆகிருக்கும்.. அவருக்கே குடுங்கனு சொல்லிட்டு போவார்..

தல்ல வந்தீங்க, உங்களுக்கு தான் குடுக்கனும்னு சொன்னப்ப, இல்ல நான் பக்கத்துல இருந்து தான் வநதேன், அதனால சீக்ரம் வந்துட்டேன்...அவர் தூரமா இருந்து வந்திருப்பார்.. அதனால லேட் ஆகிருக்கும்.. அவருக்கே குடுங்க னு சொல்லிட்டு போவார்..

சரி னு Swiggy காரர்க்கு குடுக்கபோனா, " சிக்னல்ல எதும் மாட்டிருந்தன்னா, நான் வர்றதுக்கும் இன்னும் லேட் ஆகிருக்கும், Zomoto காரரோட பெருந்தன்மைனால தான் , இது எனக்கு கிடைச்சிருக்குனு க்ரெடிட்ட Zomoto காரருக்கு குடுத்துட்டு, 500 வாங்கிப்பார்...


இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த Zomoto காரர், நான் Zomoto ல வேலை செய்றது என் வீட்டுக்கு தெரியாது னு சொல்லி, அது தெரியக்கூடாதுனு ஹெல்மெட் கழட்டாமலேயே பேசுவார்.. பெரிய ஐடி கம்பெனில வேலை அல்லது பெரிய தொழிற்சாலைல வேலை செய்றேன்னு கூட வீட்ல சொல்லிட்டு இப்டி அவர் இருக்கலாம்.. அவருக்குமே பணம் அத்தியாவசியமா தேவைபடுற ஒண்ணா இருக்குறதால தான், வீட்ல பொய் சொல்லிட்டு Zomoto ல வேலை செய்றார்..

இப்படிப்பட்ட சூழல்லயும், அவரால தனக்கு பின்னாடி வந்த Swiggy காரர பத்தி யோசிக்க முடியுது.. ரொம்ப அசால்ட்டா, 500 ரூபாய இன்னொருத்தருக்கு குடுத்துருங்க னு சொல்ல முடியுது. வாழ்க்கையில நெறய அடிபட்டுருந்தா தான் இப்டி அடுத்தவனோட வலிய ஈசியா புரிஞ்சிக்கிற தன்மையே வரும். பணம் ஈசியா கிடைச்சிட்றதாலதான் என்னவோ, கடைசி வரை பணக்காரங்களுக்கு இந்த புரிதல் வரமாட்டேங்குது‌.‌.. எளிய மக்கள்கிட்ட பேசுங்க, அவங்கள விட பெரிய புத்தகம், நூலகம், இல்ல இல்ல, பல்கலைகழகம் எதும் இல்ல! - மகாலக்‌ஷ்மி” என பதிவிட்ட பதிவை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X