புது கார் வாங்கிய விஜய் டிவி ஜாக்குலின்.. என்ன ஒரே அடியா எல்லாருக்கும் சம்பளம் ஏத்திட்டாங்களோ?
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலினும் புதுசா கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து புதிய கார்கள் வாங்குவதை பார்த்த ரசிகர்கள் என்ன எல்லாருக்கும் விஜய் டிவி இன்க்ரீமென்ட் அதிகமாக போட்டுட்டாங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் தான் KPY சரத், தாடி பாலாஜி, குக்கு வித் கோமாளி புகழ், பிக் பாஸ் ஷிவானி உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் கார் வாங்கி இருந்தனர்.

விஜய் டிவி ஜாக்குலின்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தவர் ஜாக்குலின். அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் தொடரிலும் இவர் நடித்து கலக்கினார். காமெடி சென்ஸ் அதிகம் உள்ள ஜாக்குலினுக்கு அடுத்ததாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வழங்கப்பட ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஒரு மில்லியன் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏகப்பட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அட்ராக்ஷ்னை அள்ளி உள்ள தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அவர் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

நயன்தாராவுக்கு தங்கச்சி
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார் ஜாக்குலின்.

தேன்மொழி பிஏ
தேன்மொழி பிஏ சீரியலில் லீடு ரோலான தேன்மொழியாகவே நடித்து இல்லத்து அரசிகள் மற்றும் இளைஞர்களின் இதயராணியாக மாறி உள்ளார் நடிகை ஜாக்குலின். முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஏகப்பட்ட உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

புது கார்
சீரியல் மற்றும் சினிமாவில் கலக்கி வரும் நடிகை ஜாக்குலின் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார் வாங்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது சந்தோஷத்தை ரசிகர்கள் மத்தியில் பகிர பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அப்பா டிரைவர்
மேலும், தனது அப்பா டிரைவர் என்றும் சிறு வயது முதலே கார் என்றால் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கார் என்பது இன்னொரு வீடு போல நம்முடைய சுக துக்கம் என அனைத்தும் அதுக்கு தெரியும் என்றும் சூப்பரான கேப்ஷன் கொடுத்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளார் ஜாக்குலின்.

ஊட்டியில் லூட்டி
புதிய செல்டாஸ் காரை வாங்கி உள்ள ஜாக்குலின் அந்த காரிலேயே லாங் டிரைவாக ஊட்டிக்கு டூர் சென்றுள்ள இன்ஸ்டாகிராம் ரீலையும் வெளியிட்டுள்ளார். விரைவில் ஊட்டியில் லூட்டி அடிக்கும் அத்தனை அட்டகாசங்களையும் ஜாக் அண்ட் சில் என வீடியோவாகவும் போட உள்ளார்.

சம்பளத்தை ஏத்திட்டாங்களா
தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களான கேபிஒய் சரத், தாடி பாலாஜி உள்ளிட்ட பலரும் புதிய கார்களை வாங்கி குவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும் தொகுப்பாளினியுமான ஜாக்குலினும் கார் வாங்கி இருப்பதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவி எல்லாத்துக்கும் சம்பளத்தை ஏத்திட்டாங்களா? என்ன என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











