பாக்கியராஜ் நடனம் பார்த்த பூர்ணிமா பாக்கியராஜ்

By Mayura Akilan

இயக்குநர் பாக்கியராஜின் நடனத்தினை இமிடேட் செய்யாத நடனக்கலைஞர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு விசேசமாக ஸ்டெப் போடுவார்.

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சியில் நடனமாடிய மிமிக்ரி கலைஞர் ரோபோ சங்கர் நடுவராக வந்த பூர்ணிமா பாக்கியராஜ் முன்பாக பாக்கியராஜ் போல நடனமாடி அசத்தினார்.

ஜோடி நிகழ்ச்சியில் 90 களில் வெளிவந்த அசத்தல் பாடல்களுக்காக நடனமாடினர் போட்டியாளர்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை ராதாவும், நடிகை பூர்ணிமா பாக்கிராஜூம் கலந்து கொண்டனர்.

நடிகைகளுடன் நட்பு

நடிகைகளுடன் நட்பு

தங்களுடைய காலத்தில் கேரவன் வேன் வசதியெல்லாம் கிடையாது என்று கூறிய பூர்ணிமா, உடன் நடிக்கும் நடிகைகளுடன் தோழமை உணர்வோடு பழக அதுவே வசதியாக இருந்தது என்றார்.

வெளிநாடு போனதில்லை

வெளிநாடு போனதில்லை

அவுட்டோர் சூட்டிங் என்றால் ஊட்டி, கொடைக்கானல்தான். ஆனால் 90களுக்கு மேல் வெளிநாடுகளுக்கு சூட்டிங் போனது எங்களுக்கு பொறாமையாக இருக்கும் என்றார் பூர்ணிமா.

ரோபோ சங்கர் ஜோடி

ரோபோ சங்கர் ஜோடி

நிகழ்ச்சியில் ஆடிய அனைத்து ஜோடிகளுமே சிறப்பாக ஆடி நடுவர்களை அசத்தினர். குறிப்பாக ரோபோ சங்கர் ஜோடி அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தினர்.

தன்னுடைய மனைவி சினிமாவில் குரூப் டான்சராக இருந்தார் என்பதால் அவர்தான் தனக்கு பயிற்சி அளிப்பதாக கூறினார் ரோபோ சங்கர். அது மட்டுமல்லாது மனைவியோடு மேடையில் ஏறி நடனமாடினார்.

பாக்கிராஜ் நடனம்

பாக்கிராஜ் நடனம்

நிகழ்ச்சியில் பாக்கியராஜ் நடிப்பு பற்றி பேசப்பட்டது. அவரின் நடனம் பற்றி பூர்ணிமா விடம் கேட்டபோது, அவருக்கு நடனமாடவே தெரியாது என்று கூறினார்.

திவ்யதர்ஷினி அழகு

திவ்யதர்ஷினி அழகு

கடந்த முறை குட்டைப் பாவடை அணிந்து வந்த தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இந்த முறை அழகாய் புடவை உடுத்தி வந்திருந்தார்.

ஜோடி நிகழ்ச்சியின் 90களில் வெளியான பாடல்களுக்கான நடனம் இந்த வாரமும் தொடர உள்ளது. பூர்ணிமா பாக்கியராஜின் சினிமா அனுபவங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கூறி முடித்தார் நிகழ்ச்சித் திவ்யதர்ஷினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X