விஜய் டிவி ஜோடி சீசன்–6’: முதல் பரிசு ரூ.10 லட்சம் வென்ற ரபீக்- காப்ரியல்லா

By Mayura Akilan

விஜய் டி.வி.யின் ஜோடி சீசன்-6 நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக ரபிக் மற்றும் காப்ரியல்லா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அதன் ஒரு பகுதி கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பானதை தொடர்ந்து, அடுத்த இறுதிப்பகுதி விஜய் டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஜோடியின் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு நடிகைகள் ராதா, அம்பிகா, டான்ஸ் மாஸ்டர் தினேஷ், நடுவர்கள். நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில்

இறுதிச் சுற்றில்

இந்த ஜோடி நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ரபீக்-காப்ரியல்லா, மணிகண்டன் - தேவிப்பிரியா, ரோபோ சங்கர் - சந்தியா மற்றும் ஷில்பா-சத்யா ஆகியோர் பங்கேற்றனர்.

கார்த்தி-காஜல் அகர்வால்

கார்த்தி-காஜல் அகர்வால்

ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜோடி சீசன் 6 இறுதிப் போட்டியின் சிறப்பு நடுவர்களாக நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

டிடியின் நடனம்

டிடியின் நடனம்

விஜய் டிவியின் தொகுப்பாளினி திவ்யதர்சினி நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பூர்ணா நடனம்

பூர்ணா நடனம்

நடிகை பூர்ணா எழிலாக நடனமாக ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.

ரபீக்-காப்ரியல்லா

ரபீக்-காப்ரியல்லா

முதல் பரிசு பெற்ற ரபிக் - காப்ரியல்லாவிற்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக விஜய் டி.வி. வழங்கியது. இரண்டாவது இடத்தை பெற்ற மணிகண்டன் - தேவிப்பிரியாவிற்கு ரூபாய் 5 லட்சம் பரிசளிக்கப்பட்டது.

ரோபோ சங்கர் - சந்தியா

ரோபோ சங்கர் - சந்தியா

மூன்றாவது இடத்தை பெற்ற ரோபோ சங்கர் மற்றும் சந்தியாவிற்கு ரூ. 3 லட்சமும் வழங்கப்பட்டது. ஷில்பா மற்றும் சத்யாவிற்கு ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X