விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் சீசன்-7: ரசிகர் முன்னிலையில் இன்று இறுதி போட்டி!
சென்னை: விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 சீசன் 7ன் இறுதி போட்டி இன்று மாலை 6 மணி முதல் ரசிகர்கள் முன்னிலையில் நேரடி ஒளிபரப்பாக நடைபெற உள்ளது.
ஜோடி நம்பர்-1 சீசன் 7ன் இறுதி போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இறுதி போட்டியில், ஜெனிபர்-யுவராஜ், பிரியா-சித்தார்த், சுனிதா-லோகேஷ், ஆனந்தி-அமுதவாணன் ஆகிய நான்கு ஜோடிகள் களம் காண்கின்றன.

இவர்கள் ரசிகர்கள் முன்னிலையில் ஆட்டம்போட்டு திறமையை காண்பிக்க உள்ளனர். கடந்த சீசன் போட்டியாளர்கள் ரோபோ சங்கர், கேப்ரியல்லா, ரஃபீக், தேவிபிரியா, சந்தியா, சந்தியா, ஷில்பா ஆகியோரும் ரசிகர்களை குஷிப்படுத்த ஆட்டம் போட உள்ளனர்.
சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற திவாகர், சையது சுபாஹான், சரத் சந்தோஷ், பார்வதி, சோனியா ஆகியோரும் தங்கள் இன்னிசை மழையால் ரசிகர்களை நனைக்க உள்ளனர். நடிகை வரலட்சுமி மற்றும் லயோலா டிரீம் டீம் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications