அந்த மனசு இருக்கே.. மாற்றுத் திறனாளிக்கு ஜூஸ் கடை வைத்துக் கொடுத்த KPY பாலா.. குவியும் பாராட்டு!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபான நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பாலா. இதன் காரணமாகவே இவரை மக்கள் KPY பாலா என்று அழைத்து வருகிறார்கள். இவர் தன்னால் முடிந்த உதவிகளை தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு செய்து வருகிறார். இதன் மூலம் பயன் அடைந்த மக்கள் பலர். இப்படி இருக்கும்போது, பாலா தற்போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஜூச் கடை வைத்துக் கொடுத்துள்ளார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாலா கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறார். இவரது உதவும் மனப்பான்மையை உணர்ந்த பலரும் பாலாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனை பாலாவே பல மேடைகளில் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் இவர் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஜூஸ் கடை வைத்துக் கொடுத்துள்ளது, பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
KPY பாலாவின் டைமிங் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனக்குள் நடனம், நகைச்சுவை, நடிப்பு என பல திறமைகளைக் கொண்டுள்ளார் என்பதை பல மேடைகளில் வெளிக்காட்டியுள்ளார் KPY பாலா. இவரிடத்தில் இயல்பாகவே ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை இருப்பதால் KPY பாலாவிடம் சென்று உதவி கேட்டல் அது எப்படியாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை நாடும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளார்கள். KPY பாலாவும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுக்கிறார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது பரவி வருகிறது.
மாற்றுத்திறனாளிக்கு உதவி: இந்நிலையில் பாலா தற்போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஜூஸ் கடை வைத்துக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில், மாற்றுத்திறனாளியின் வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை, சந்தித்து நலம் விசாரிக்கிறார். அதன் பின்னர் அவர்களின் குழந்தையை, வாங்கி கொஞ்சுகிறார். அதன் பின்னர் மாற்றுத்திறனாளியுடன், அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கடைக்குச் செல்கிறார். அங்கு சென்ற அவர்கள் இருவரும் ஜூஸ் தயாரிக்கும் இயந்திரத்தின் மீது இருந்த துணியை அகற்றுகிறார்கள். அதன் பின்னர், கடைக்கு முன் தேங்காய் உடைக்கிறார் பாலா. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் பாலாவை பாராட்டி வருகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக இருக்கும் KPY பாலா எப்போது சினிமாவில் கதாநாயகனாக நடிப்பார் என்ற கேள்வியை பலரும் கேட்டு வந்தார்கள். ஆனாலும் பாலா தனக்கு கிடைத்த பல இணை கதபாத்திரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் கடந்த மாதத்தில் பாலா கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
முதல் படம்: இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், " நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, எனது நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேற உள்ளது. நான் முதன் முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளேன். நீங்க இல்லாம நான் இல்லை. படத்தின் இயக்குநர் ஷெரிஃப், உடன் நடிக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர்கள் மெர்வின் மற்றும் விவேக், தயாரிப்பு நிறுவனமான ஆதிமூலம் புரடெக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் படத்தின் பெயர் என்ன எனவும் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











