twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகாபாரதம்: திரௌபதியின் சபதம்… குருஷேத்திர யுத்தம் தொடக்கம்

    By Mayura Akilan
    |

    விஜய் டிவியின் மகாபாரதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சகுனியின் ஆலோசனைப்படி பாண்டவர்களை அவமதிக்க திட்டம் தீட்டுகிறான் துரியோதனன்.

    விஜய் டி.வி கடந்த அக்டோபர் மாதம் 7ந் தேதி முதல் மகாபாரதம் தொடங்கியுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் பிரம்மாண்டமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

    பொதுவாக மகாபாரத தொடர்களில் குருஷேத்திர யுத்தம்தான் பிரதானமாக இருக்கும். ஆனால் இது குருஷேத்திர யுத்தத்தை சுற்றி நடந்த சம்பவங்களை விவரிக்கும். இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது.

    சிசுபாலனை கொன்ற கிருஷ்ணன்

    சிசுபாலனை கொன்ற கிருஷ்ணன்

    பாண்டவர்களின் ராஜசூய யாகத்தில் தன்னை அவமானப்படுத்திய சிசுபாலனை வதம் செய்கிறான் கண்ணன். இதனால் கிருஷ்ணனை எதிர்த்து ஆயுதம் ஏந்துகின்றனர் துரியோதனன், துச்சாதனன், கர்ணன்.

    துரியோதனுக்கு அவமானம்

    துரியோதனுக்கு அவமானம்

    இந்திரபிரஸ்தம் அரண்மனையில் சக்கரவர்த்தி யுதிஷ்டிரர் முன் ஆயுதம் ஏந்தியதற்காக அனைவரும் தண்டனை அளிக்க வேண்டுகின்றனர். ஆனால் தண்டனை கொடுக்காமல் அவர்கள் மூவரின் ஆயுதங்களை மட்டுமே பறிக்கின்றனர்.

    தண்ணீரில் விழுந்த துரியோதனன்

    தண்ணீரில் விழுந்த துரியோதனன்

    இதனால் அவமானம் அடைகிறான் துரியோதன். அதே வேகத்தோடு போய் தண்ணீரில் விழுகிறான். உடனே திரௌபதியின் பணிப்பெண், ‘பார்வையற்றவரின் புதல்வரும் பார்வையற்றவரா' என்று கேட்கவே அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் மேலும் அவமானம் அடைகிறான். அப்போது திரௌபதி சிரிப்பதைக் கண்டு ஆத்திரம் கொள்கிறான்.

    நெருப்பில் எரிய திட்டம்

    நெருப்பில் எரிய திட்டம்

    அதே வேகத்தோடு அஸ்தினாபுரம் வந்த துரியோதனன் நெருப்புமூட்டி தற்கொலைக்கு முயற்சிக்கிறான். ஆனால் பாண்டவர்கள் மீது போர்தொடுக்கவேண்டும் என்று கூறுகிறான் கர்ணன்.

    சகுனியின் ஆலோசனை

    சகுனியின் ஆலோசனை

    பாண்டவர்களை பழிவாங்கியே தீரவேண்டும் என்று எண்ணும் துரியோதனுக்கு அவன் மாமா சகுனி, கவனம் முழுவதையும் திரௌபதியின் பக்கம் திருப்பு என்று ஆலோசனை கூறுகிறான். அவளை அவமானப்படுத்துவன் மூலம் மட்டுமே பாண்டவர்கள் அனைவரையும் அவமதிக்க முடியும் என்கிறான் சகுனி.

    கிருஷ்ணரின் ஆலோசனை

    கிருஷ்ணரின் ஆலோசனை

    அதே சமயம் அவமானப்பட்ட துரியோதன் மூலம் ஆபத்து வரும் என்றும் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்றும் திரௌபதிக்கு ஆலோசனை கூறுகிறார் கிருஷ்ணர்.

    சகுனியின் சூதாட்டம்

    சகுனியின் சூதாட்டம்

    இனி மகாபாரதக் கதையில் முக்கிய கட்டமான சூதாட்டம் நடைபெற உள்ளது. இதில் பாண்டவர்கள் தோற்பதும், சபையில் திரௌபதியின் துகிலுரியும் நிகழ்ச்சியும் இனிவரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது.

    திரௌபதியின் சபதம்

    திரௌபதியின் சபதம்

    தன்னை அவமானம் செய்த துரியோதன், துச்சாதனன் உள்ளிட்ட கவுரவர்களை பழிவாங்குவேன் என்று கூறி சபதம் செய்வதும், பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதும், அதைத்தொடர்ந்து குருஷேத்திர போரும் இனி ஒளிபரப்பாக உள்ளது.

    ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டம்

    ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டம்

    மகாபாரதம் தொடர் 100கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர்,நடிகையர்கள் அணியும் ஆடைகள், நகைகள் என அனைத்துமே பிரம்மாண்டம் என்பதால் நேயர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

    English summary
    Duryodhanan thinks that Draupadi was the one who teased him when he fell into the water. Duryodhanan tries to commit suicide by setting himself on fire but Karnan recuses him. Duryodhanan begs Saguni for his forgiveness and asks him to return. Saguni tells Duryodhanan to take revenge on Draupadi which will hurt the Pandavas pride.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X