19 வயதில் கிஸ்.. டேட்டிங் ரகசியத்தை சொன்ன மகாநதி சீரியல் நடிகை!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி பிரியா. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப இயல்பான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர், தான் டேட்டிங் சென்றதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மகாநதி சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் லட்சுமி பிரியா. சென்னையைச் சேர்ந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மாடல் அழகியானார். இதற்காக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். 2018ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் மிராக்கி அழகிப்போட்டியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

Vijay TV Mahanadhi Serial Actress Lakshmi Priya jolly interview

மகாநதி சீரியல்: இதன்பிறகு பட வாய்ப்புக்காக தேடி அலைந்த லட்சுமி பிரியாவிற்கு, யோகிபாபுவுடன் பன்னிக்குட்டி, திரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தல படத்தில் பெண் கான்ஸ்டபிளாகவும், ட்ரிப் படத்தில் சுனைனாவின் தோழியாகவும் நடித்திருந்தார். சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும், மகாநதி சீரியல் மூலம், மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளார். அந்த சீரியலில் நிவின் மற்றும் காவேரியின் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும்.

நடிகை லட்சுமி பிரியா: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள லட்சுமி பிரியா, குஷி, வாலி படத்தை பார்த்து எனக்கு யூகேஜியில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் குடும்பத்தினர் நான் படிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இதனால் அவங்க ஆசைக்காக என்ஜினியரிங் படித்தேன். இப்போதும், நான் சினிமாவில் நடிப்பது என் குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவே இல்ல, இவர்கள் நடிக்கவே கூடாது, சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

Vijay TV Mahanadhi Serial Actress Lakshmi Priya jolly interview

ராசியான பெயர்: ஒரு கட்டத்தில் நான் அவர்களின் பேச்சை மீறி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். இதனால் என் பெற்றோர் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். மகாநதி சீரியலுக்கு பிறகு தான் அவர்கள் என்னிடம் பேசினார்கள். நான் யோகி பாபுவுடன் முதன் முதலில் பன்னிக்குட்டி என்ற படத்தில் காவேரி என்ற பெயரில் தான் நடித்தேன். தற்போது மகாநிதி சீரியலிலும் காவேரி என்ற பெயர் தான். இந்த பெயருக்கும் எனக்கும் ஏதோ ஒரு ராசி இருக்கு என்றார்.

19 வயதில் கிஸ்: இதைத் தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, பேசிய அவர், நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதும், என் 19 வயதில் முதன் முதலில் காதலனுக்கு முத்தம் கொடுத்தேன். அவருடன் தான் டேட்டிங் சென்றேன். டேட்டிங் போகனும், பார்க்கணும், நல்ல சாப்பிடனும் அவ்வளவு தான் இந்த கல்யாணம் எல்லாம் நமக்கு செட் ஆகாது என்றார். லட்சுமி பிரியாவின் இந்த பேட்டி தற்போது டிராண்டாகி வருகிறது.

மகாநதி சீரியல்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில், தந்தையை இழந்த நான்கு சகோதரிகள் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை சுற்றியே இந்த சீரியல் நகர்கிறது. இந்த சீரியலில், ஹீரோ நிவின்- காவிரி இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், தற்போது காவேரி, விஜய்யை ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். இப்படி பல திருப்பங்களுடன் மகாநதி சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X