Mahanadhi Serial: மகாநதி சீரியல் காவேரி எத்தனை படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் லீட் ரோலில் நடித்து வரும் காவேரி பற்றிய சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது.

மகாநதி சீரியலில், தந்தையை இழந்த காவேரி, கங்கா, யமுனா, நர்மதா என்ற நான்கு சகோதரிகள் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை சுற்றியே இந்த சீரியல் நகர்கிறது. இந்த சீரியலில், ஹீரோ நிவின்- காவிரி இருவரும் காதலிக்கின்றனர். மற்றொரு பக்கம் பசுபதி, காவேரி தந்தைக்கு துரோகம் செய்ததை காவேரி தெரிந்து கொண்டதால் காவேரி குடும்பத்தை ஒழித்துக்கட்ட சரியான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

Vijay TV Mahanadhi Serial Actress Lakshmi Priya Movies List

மகாநதி சீரியல்: மேலும், கடைசி தங்கை நர்மதா ஆப்ரேஷனுக்காக சென்னை வரும், நான்கு சகோதரிகள் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆப்ரேஷனுக்கான பணம் தொலைந்து போக, அந்த நேரத்தில் அந்த வீட்டின் ஓனர் விஜய், பணத்தை நான் தருகிறேன். ஆனால், தன்னை ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். காவேரி பணத்துக்காக விஜய்யை திருமணம் செய்து கொள்கிறாள் இப்படித்தான் பல திருப்பங்களுடன் மகாநதி சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

அழகிப்பட்டம்: இந்த சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் லட்சுமி பிரியா, கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் வரவேண்டும் என்பதற்காக மாடலிங்கை தேர்வு செய்த இவர், ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார். அதோடு மிஸ் மிராக்கி 2018 என்னும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார். இதன்பிறகு பட வாய்ப்பு தேடி அலைந்த நிலையில், யோகிபாபுவுடன் பன்னிக்குட்டி, திரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தல, ட்ரிப் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இதில், பன்னிக்குட்டி திரைப்படம் ஒரளவிற்கு பெயரை பெற்றுத்தந்தது.

தனி ரசிகர் கூட்டம்: பின்பு சினிமாவில் அதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்பு அமையாததால், சின்னத்திரை பக்கம் வந்த இவருக்கு. மகாநதி சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இந்த சீரியலில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்கும் ஒரு முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில், துறுதுறுனு குறும்பாக பேசும் லட்சுமி பிரியாவிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X