காதல் மலரும் சமையலறைகள்… நீயா? நானா? சுவாரஸ்யம்

By Mayura Akilan

என்னதான் வேலை செய்தாலும் சமையல் செய்து சாப்பிடுவது என்பது அவசியமானது. எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், எத்தனை பேரை அதட்டி வேலை வாங்கினாலும் வீட்டு அடுப்பங்கரையில் சமையல் செய்துதான் ஆகவேண்டும்.

சிலருக்கு சமைப்பது ஆனந்தமாக இருக்கும். அதே சமையல் சிலருக்கு அலுப்பைத் தரும். எப்படா சமைத்து முடிப்போம், இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சமையல் தெரிந்த பெண்கள் சமையலை ஆனந்தமாக செய்கின்றனரா? அதை ஒருவித அயற்சியோது செய்கின்றனரா என்பதைப் பற்றி இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

எல்லோருக்கும் அவசியமான விவாதம் என்பதால் கொஞ்சம் ஆர்வமாகவே கவனித்தேன்.

ரொம்ப போரடிக்குதே

ரொம்ப போரடிக்குதே

தோசை செய்வது கூட போரடிக்கும் சமாச்சாரம் என்றார் ஒரு பெண். டிவி பார்க்க முடியவில்லை. யார் வீட்டுக்கும் போகமுடியவில்லை. அனல் பிடிக்காது. வாசனை பிடிக்காது உள்ளிட்ட காரணங்களால் சமையலில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று யோசிப்பதாக கூறினர் சில பெண்கள்.

சமையல் ஒரு கலை

சமையல் ஒரு கலை

உணவு தயாரிப்பது என்பது புதிய கண்டுபிடிப்பு. சமையலை ஒரு கலையாக பார்க்கலாம். சமையல் பிடித்தமானது. அதன் சுவை, தாளிக்கும் ஓசை, இஞ்சியும், பூண்டும் கலந்து செய்யும் ஃப்ளேவர் ரொம்பவும் பிடித்தமானது என்றனர் சமையலை விரும்புபவர்கள்.

என் சப்ஜெக்ட்டில் எவ்வளவு சர்ப்ரைஸ் இருக்கோ அதே போல சமையல் செய்யும் போதும் இருக்கும் என்று சமையலை ஆனந்தமாக செய்பவர்கள் கூறினர்.

சமையல் ஒரு கொடுமைங்க

சமையல் ஒரு கொடுமைங்க

வேலைக்கும் போய்க்கொண்டு சமையல் செய்வது கொடுமையான விசயம் என்கின்றனர் சமையல் செய்வதை விரும்பாதவர்கள். வேலைக்கு போய்விட்டு வந்த களைப்பு, அதோடு சமையல் அறைக்கு நுழைந்து அவசரம் அவசரமாக செய்வது பிடிக்காத காரியம் என்றனர்.

அழகு படுத்திக்க முடியலை

அழகு படுத்திக்க முடியலை

பாத்திரம் கழுவுவதன் மூலம் நகம் வளர்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார் ஒரு பெண்மணி. அதற்கு பதிலளித்த ஒரு பெண் 24 மணிநேரத்தில் சமையலுக்கு நேரம் ஒதுக்கி செய்யலாம். நகத்தை பராமரிக்கலாம் என்று கூறினார்.

எனக்கு சமையல் இப்போதைக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். அதனால்தான் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் வைத்திருப்பதாக கூறினார். சமையல் செய்யாமல் இருப்பதால் சந்தோசமாக இருப்பதாக கூறினார் அந்தப் பெண். அதனால் என் கணவரை மகிழ்ச்சிப்படுத்த மகிழ்ச்சிப்படுத்த முடிகிறது என்றார்.

ருசியால் ஜெயிக்கலாம்

ருசியால் ஜெயிக்கலாம்

சமையல் மூலம் டைம் மேனேஜ்மென்ட் கற்றுக் கொடுக்க முடியும் என்றார் சமையலை விரும்பும் இளம் பெண். இது என்னுடைய ராஜ்ஜியம், கணவனின் அன்பை பெற முடிவது சமையலறை மட்டும்தான். அதோடு நான் என்னையும் அழகுப் படுத்திக் கொண்டு இரண்டு விதங்களிலும் கணவரை சந்தோசப்படுத்துகிறேன் என்றார் டாக்டர் தொழில் செய்யும் பெண் ஒருவர்.

ஆஸ்கார் அவார்ட் வாங்கின திருப்தி

ஆஸ்கார் அவார்ட் வாங்கின திருப்தி

எத்தனை வயதானாலும் ஆசையாக சமைத்து பரிமாறும் போது அதை ஆசையாக சாப்பிடும் போது ஒருவித திருப்தி கிடைக்கிறது என்றனர் பெண்கள். கணவரை ஜெயிப்பது சயனஅறை, சமையலறை போன்ற இடங்களில்தான் என்றார் ஒரு பெண்.

சோர்வாக உணர்கிறோம்

சோர்வாக உணர்கிறோம்

தூக்கம் கெடுகிறது. உடல் ரீதியாக களைப்பாக இருக்கிறது அதனால் சமையலை வெறுக்கிறோம் என்றார்கள் பெண்கள். அதே சமயம் சமையலை ஒதுக்கியதன் மூலம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைவதில்லை என்றார் ஒரு பெண். இதன் மூலம் கணவருடன் சந்தோசமாக இருக்கிறது என்றார்.

அடுப்படி என்னும் அதிகாரம்

அடுப்படி என்னும் அதிகாரம்

அடுப்படியை கைப்பற்றினால்தான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். என்வீடு என்னுடைய அடுப்பங்கரை இதை இன்னொருவருக்கு நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார் ஒரு பெண். அடுப்பங்கரையை நாம் நேசித்தால் நம்மை எல்லோரும் நேசிப்பார்கள் என்றார் ஒரு பெண். அடுப்படி ருசிதான் எல்லோரையும் கட்டுக்குள் வைக்கும் என்றும் பேசினார்கள்.

பெண்கள் மட்டும்தான் சமைக்கணுமா?

பெண்கள் மட்டும்தான் சமைக்கணுமா?

சமையலை பாரமாக நி/னைக்காமல் அதை ஒரு கலையாக நினைக்க வேண்டும் என்றார் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக வந்த எழுத்தாளர் தமிழ்செல்வன். இவர் ஆண்களும் சமைக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். ‘ஆண்களும் சமைப்பது அதனினும் இனிது' என்ற நூலை எழுதியுள்ளார்.

ஆண்கள் நல்லவர்களாகிவிடுவார்கள்

ஆண்கள் நல்லவர்களாகிவிடுவார்கள்

பெண்ணாக பிறந்தவர்கள் அனைவரும் காலம் காலமாக ஆண்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமைக்கின்றனர். சமைக்க பிடிக்கவில்லை என்று கூறும் பெண்கள் கூட கணவருடன் சந்தோசமாக நேரம் ஒதுக்கமுடியவில்லை என்பதற்காவே சமையலை ஒதுக்குவதாக கூறினர். எனவே ஆண்களுக்கு சமைப்பதைப் பற்றி சொல்லிக் கொடுங்களேன் என்று கேட்டார்.

காதல் மலரும் இடம்

காதல் மலரும் இடம்

பெண்களின் உலகம் சமையலறையாகிப் போய்விட்டது. சமைத்த உடன் அதற்கான ரிசல்ட் கிடைத்துவிடுகிறது. இது சின்னச் சின்ன சந்தோசம். தம்பதியர் இருவரும் சேர்ந்து சமைக்கும் போது அங்கே அந்நியோன்னியம் மலரும். எனவே காதல் மலரும் இடம் சமையலறை என்றார்.

சமையல் போராடிக்காது

சமையல் போராடிக்காது

இருவரும் பேசிக் கொண்டே சமைப்பதன் மூலம் போரடிக்காது என்றார் இதை அனுபவப்பூர்வமாக உணர்வதாக கூறினார் ஒரு பெண். தனியாக சமையல் செய்யும் போது பதட்டத்துடன் இருந்த மனைவிக்கு சமையல் செய்து கொடுத்து பதட்டத்தை குறைத்தேன் என்று கூறினார் தமிழ்செல்வன்.

நல்லவர்களாக மாறுவார்கள்

நல்லவர்களாக மாறுவார்கள்

அது வாழ்க்கை சம்பந்தப்பட்டது. உயிர் தொடர்புடையது. ரொம்ப மோசமான ஆண்களைக்கூட சமைக்க விட்டால் அவன் நல்லவனாகிவிடுவான். அது மனங்களை ஹீலிங் செய்யும் என்றும் கூறினார் எழுத்தாளர்.

சமையல் மட்டுமே முக்கியமில்லை

சமையல் மட்டுமே முக்கியமில்லை

இன்றைக்கு பெண்களுக்கு சமையல் மட்டுமே அவசியமில்லை எனவே ஒரு குடும்பம் வளர இருவரும் வேலைக்குப் போகவேண்டியது அவசியமாகிறது. நெருக்கடி நிறைந்த இந்த காலகட்டத்தில் பெண்கள் மட்டுமே சமையலறைக்குள் நுழைய வேண்டும் என்றில்லை. ஆணுக்கும் சொல்லித்தரவேண்டும். சிறப்பு கவனத்தோடு அவர்களை வளர்க்க வேண்டும் என்றார் கோபிநாத்.

அதே சமயம் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்வதன் மூலம் அதில் சிக்கலும் இருக்கிறது. அடுப்படி பக்கமே போகாமல் மற்றொருவரின் சுவைக்கு அடிமையானவர்களை நம் பக்கம் இழுப்பது கொஞ்சம் கடினம்தான் என்றார்.

குழப்பமான முடிவோ?

குழப்பமான முடிவோ?

மொத்தத்தில் அர்த்தமுள்ள இந்த விவாதம் கொஞ்சம் குழப்பத்துடனே முடிந்தது போல இருந்தது. பெண்கள் சமைப்பது அவசியம் என்று சொன்னார்களா? இல்லை வேலைக்கு ஆள் போட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று சொன்னார்களா? என்பதில்தான் எனக்கு குழப்பமே.

எவ்ளோ நேரம்தான் டிவி பார்ப்ப சீக்கிரம் படுக்கணும்மா. நாளைக்கு காலையில எழுந்து இடியாப்பம் செய்யணுமே என்று கணவர் சொல்லவே டிவியை சுவிட்ச் ஆப் செய்து படுக்க போய்விட்டேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X