எளிய மனிதர்களிடம் கரிசனம் தேவை… நீயா நானா சுவாரஸ்யம்

By Mayura Akilan

அண்ணாச்சி கடைகள் தொடங்கி காய்கறி விற்கும் பெண்கள், கீரைக்காரம்மா, செருப்பு தைப்பவர், ஆட்டோ டிரைவர், என தினந்தோறும் எத்தனையோ வகைகளில் பொதுமக்களுக்கு சேவை செய்பவர்களை, விற்பனையாளர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பெரிய கடைகளுக்குச் சென்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களாகிய பொதுமக்கள் இதுபோன்ற எளிய மனிதர்களிடம் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசுவார்கள்.

அதேபோல் சேவை செய்பவர்களும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. வாடிக்கையாளர்கள், சேவை செய்பவர்கள் ஆகிய இருவரிடையேயான கருத்துக்கள்தான் இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானாவில் முக்கிய டாபிக்.

மக்களின் நண்பர்கள்

மக்களின் நண்பர்கள்

துணிக்கடை வைத்திருப்பர் தொடங்கி, மளிகைக் கடைக்காரர், ஆட்டோ டிரைவர், கஸ்டமர் சர்வீஸ், செருப்பு தைப்பவர், கிரெடிட் கார்டு சேவையாளர் என பலருமே பொதுமக்களுக்கு சேவை செய்யும் நண்பர்கள்தான். இவர்கள் எல்லோருமே பொதுவாக ஒரு கருத்தை முன் வைத்தனர். அது இன்றைய வாடிக்கையாளர்களின் குணம் மாறியுள்ளது என்பதுதான் அது.

அதிகாரத் தோரணை

அதிகாரத் தோரணை

வாடிக்கையாளர்களின் குணம் மாறிவருகிறது என்று கூறிய சேவையாளர்கள், அவர்களின் தோரணையே அதிகாரமாக இருக்கிறது என்றனர். தங்களை மரியதைக்குறைவாக நடத்துகின்றனர் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

இசையை கண்டுகொள்வதில்லை

இசையை கண்டுகொள்வதில்லை

திருமணம், ரிசப்சன் போன்ற விழாக்களில் மேடைக்கச்சேரியில் பாடும் பாடகர்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்பது குற்றச்சாட்டு. பேச்சு வாக்கில் மேடையில் பாடும் பாடகியை கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று ஒருவரைப் பார்த்து கேட்டார் கோபிநாத், சட்டென்று சுதாரித்த அவர், பாடுவதை ரசிக்கலாம் ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றார் மிஸ்டர் பொதுஜனம்.

சேவையாளர்கள் குணம்

சேவையாளர்கள் குணம்

சேவையாளர்களின் குணம் மாறிவருகிறது என்று கூறினர் பொதுமக்கள். எதையாவது தங்களின் தலையில் கட்டி ஏமாற்றிவிடுகின்றனர். கொடுக்கும் காசுக்கு தரமான பொருளைத் தரவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

ரோட்டோர கடைகள்

ரோட்டோர கடைகள்

சிறிய ஜவுளிக்கடைக்கு வரும் கஸ்டமர்கள் செய்யும் அலைக்கழிப்பு தாங்க முடியாது என்று கூறிய கடைக்காரர்கள், கடைசியில் பொருட்களை வாங்காமல் போவது மனவருத்தத்தை தரும் என்றனர்.

தரம் குறைவா இருக்கே

தரம் குறைவா இருக்கே

சின்ன கடைகளில் தரம் குறைவு என்பது பொதுமக்களின் கருத்து. போட்டு பார்க்க முடியாது. சின்னக் கடைகளில் பிராண்டுகள் இருக்காது என்பது கருத்து. மேலும் சிறிய கடைகளில் வாங்கினால் மதிப்பு குறைந்துவிடுமோ என்றும் கூறினர்.

விற்பனை பிரதிநிதிகள்

விற்பனை பிரதிநிதிகள்

சேல்ஸ் ரெப் பணியாளர்களை டாக்டர்கள் மதிப்பதில்லை. காத்திருக்க வைக்கின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்திருக்கிறோம் என்றார் ஒருவர். சேல்ஸ் எக்ஸிகியூடிவை தரக்குறைவாக பார்க்கின்றனர். கோபப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட கோபம் வருகிறது நாயை விட்டு கடிக்க விடுகின்றனர்.

செருப்பு தைக்க பேரம்

செருப்பு தைக்க பேரம்

செருப்பு தைக்க பேரம் பேசுகின்றனர் என்றார் ஒரு தொழிலாளி. ஆனால் ஆள் பார்த்து கூலி பேசுகின்றனர் என்பது பொதுமக்கள் தரப்பு புகார்.

அதேபோல் டெலிகாலர்ஸ்களிடம் முறைகேடாக பேசுகின்றனர் என்பது புகார். என்ன நிலையில் இருக்கிறோம் என்று தெரியாமல் தொந்தரவு செய்கின்றனர் என்பது பொதுமக்கள் தரப்பு குற்றச்சாட்டு.

பேரம் பேசுவது எப்போது

பேரம் பேசுவது எப்போது

காய்கறிக் கடை, ஆட்டோ, பூக்காரி, தெருவோரா கீரைக்காரி மொபைல் ஷாப், போன்ற இடங்களில் பேரம் பேசுவதாக கூறிய பொதுமக்கள் பேரம் பேசாவிட்டால் தூக்கம் வராது என்றனர். அதோடு எங்கெல்லாம் பேரம் பேசுவோம் என்றும் தெரிவித்தனர்.

பெரிய கடைகளில் கூச்சம்

பெரிய கடைகளில் கூச்சம்

பெரிய கடைகளில் பேரம் பேச கூச்சப்படுவதாக கூறிய பொதுமக்கள் தரப்பினர், மால்ஸ், பெரியகடைகளில் பிரைஸ்டேக் பாக்கவே மாட்டோம் என்றனர். அங்கெல்லாம் டிஸ்கவுண்ட் கேட்க தயக்கம் என்று கூறிய அவர்கள், பாலிஸ்டாக பேசுபவர்களிடம் பேரம் பேசத் தயங்குவதாக தெரிவித்தனர்.

நடனப்பள்ளிகள்

நடனப்பள்ளிகள்

டெய்லர்களிடம் பேரம் பேச தயக்கம். கிளாஸ்களில் பேரம் பேச தயக்கம், நடனப்பள்ளிகளில் அதிகப் பணம் வாங்குகின்றனர் ஆனால் பேரம் பேசுவதில்லை.

கால்டாக்ஸி டிரைவர்கள்

கால்டாக்ஸி டிரைவர்கள்

கால்டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு மரியாதை இருப்பதில்லை என்பது குற்றச்சாட்டு. பொறுமையோடு இருக்கிறோம் என்று இவர்கள் கூறினாலும், டிரைவர்கள் வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர் என்பது பொதுமக்கள் கருத்து. தினப்படியை விட கூடுதலாக கொடுத்தால்தான் சரியாக கொண்டுபோய் சேர்க்கின்றனர் என்பது புகார்.

டிஸ்கவுண்ட் வேணுமே

டிஸ்கவுண்ட் வேணுமே

தள்ளுபடி என்பது இன்றைக்கு தமிழர்களின் மனதில் அழிக்க முடியாத விசயமாகிவிட்டது. ஒரு பொருள் வாங்கினால் ஏதாவது டிஸ்கவுண்ட் கிடைக்குமா? காய்கறி வாங்கினால் கறிவேப்பிலை கொசுறு வாங்குவதில் தொடங்கி ஜவுளிக் கடைக்குப் போய் கட்டைப் பை வாங்குவது வரை எதாவது வாங்காமல் விடுவதில்லை என்றனர் பொதுமக்கள். இது பழகிவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.

அல்பத்தனமான பேரம்

அல்பத்தனமான பேரம்

கர்ச்சிப், பூ, என சின்னச் சின்ன விசயங்களுக்கு பேரம் பேசுகின்றனர். மளிகைக் கடை பாக்கியை மட்டுமே பெண்டிங் சொல்கின்றனர் என்பது சேவையாளர்கள் தரப்பு குற்றச்சாட்டு. வாடிக்கையாளர்கள் மோசமாக இருக்கின்றனர் என்கிறார் மளிகைக்கடைக்காரர்.

உறவாகப் பாருங்களேன்

உறவாகப் பாருங்களேன்

போட்டி உலகில் கஸ்டமர் கேர் அவசியம் உறவாகப் பாருங்கள். ஆனால் இன்றைக்கு வெறும் பிசினசாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் சிறிய கடைகளுக்கும் நமக்குமான ஒரு உறவு இருந்தது.

இப்போது பெரிய கடைக்காரர்கள் மாதிரியே வாடிக்கையாளர்களை நினைப்பதுதான். வாடிக்கையாளர்கள் மனம் மாற்றத்திற்குக் காரணம் என்றார் கோபிநாத். இன்றைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தகவல் தெரிந்திருக்கிறது. எனவே வாடிக்கையாளர்களை கொஞ்சம் அனுசரித்துப் போங்களேன் உறவோடு இருங்களேன் என்றார்.

எளிய மனிதர்கள் மீது கரிசனம்

எளிய மனிதர்கள் மீது கரிசனம்

எளிய மனிதர்கள் திருடிவிடுவார்கள் என்பது பொதுமக்களின் எண்ணமாக இருக்கிறது. எல்லாருமே இன்றைக்கு கஸ்டமர்தான். பெஸ்ட் வாங்குகிறேன் என்று சின்னச் சின்ன மனிதர்களிடம் பேரம் பேசுகின்றனர். பெரிய கடைகளிடம் பேரம் பேசுவதில்லை காரணம் கவுரவம். எளிய மனிதர்கள் வாழ்க்கை மேலே வருவதில் கரிசனம் வேண்டும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப வேலையை கறந்து விட வேண்டும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும் என்றார் கோபிநாத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X