நம்ம வீட்டு பொண்ணு… விஜய் டிவியில் வருகிறது புது சீரியல்…வைரலாகும் ப்ரோமோ!

சென்னை : சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முதன்மையான தொலைக்காட்சியான வலம் வரும் விஜய் சேனலில் நம்ம வீட்டு பொண்ணு என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இத்தொடர், ஆகஸ்ட் 16 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இத்தொடரில், நடிகர் சுர்ஜித் குமார், ஷப்னம், அஷ்வினி ஆனந்திதா, அருணா சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

திரைப்படங்களுக்கு நிகராக

திரைப்படங்களுக்கு நிகராக

ஒரு திரைப்படத்திற்கு கதை எழுதுவது என்பதே மிகப்பெரிய சவாலான ஒன்று. இரண்டரை மணி நேரத்தில் முடியும் கதையில் விறுவிறுப்பு,பரபரப்பு சுவாரசியம், பாடல் என அனைத்தையும் கூட்டி ஒரு மக்கள் விரும்பும்படி ஒரு திரைப்படத்தை தருவது என்பது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இதையும் இயக்குனர்கள் இயல்பாக நிகழ்த்தி காட்டி வெற்றி கண்டுள்ளனர்.

தினமும் சுவாரஸ்யம்

தினமும் சுவாரஸ்யம்

ஒரு திரைப்படத்தை விட சின்னத்திரையில் ஒரு சீரியலை வெற்றி பெற செய்வது கூடுதலான சவாலாகும். இரண்டரை மணி நேரத்தில் முடியும் படத்திலேயே பல மெனக்கெடல்களை சந்திக்கும் நிலையில், 5 அல்லது 6 வருடம் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குவது என்பது அத்தனை எளிதானது அல்ல அதிலும் சுவாரசியத்தை கூட்டி பரபரப்பாக்கி ரசிகர்களை தொலைக்காட்சி முன் அமரவைத்து வெற்றிபெற்று வருகின்றன பல தொடர்கள்.

நம்ம வீட்டு பொண்ணு

நம்ம வீட்டு பொண்ணு

சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டியால் அவ்வப்போது புதுப் புது சீரியல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முதன்மையான தொலைக்காட்சியான வலம் வரும் விஜய் சேனலில் நம்ம வீட்டு பொண்ணு என்ற புதிய சீரியல் ஆகஸ்ட் 16 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நம்ம வீட்டு பொண்ணு ப்ரோமோ

நம்ம வீட்டு பொண்ணு ப்ரோமோ

இந்த சீரியல் குறித்து ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில், ஆரம்பமே ஹீரோவின் மீது சாம்பாரைக் கொட்டிவிட்டு மோதல் ஏற்படுகிறது. காதலுக்கு முதல் படி மோதல் என்பது போல இருவருக்கும் காதல் ஏற்படுமா இல்லை இவர்கள் இருவரும் எலியும் பூனையும் போல இருப்பார்களா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

முக்கிய கேரக்டர்

முக்கிய கேரக்டர்

இதில்,கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். மேலும், ராஜா ராணி தொடரில் வடிவு கதாபாத்திரத்தில் நடித்த ஷப்னம், நடிகை அஷ்வினி ஆனந்திதா, அருணா சுதாகர் , அம்ருதா, நித்தியா ரவிந்தர் , வைஷாலி தணிகா, சந்தியா விஜே உள்ளிட்டோர் இத்தொடரில் நடிக்கின்றனர்.

தென்றல் வந்து என்னைத்தோடும்

தென்றல் வந்து என்னைத்தோடும்

சமீபத்தில் தென்றல் வந்து என்னைத்தோடும் என்ற சீரியல் ப்ரோமோ விஜய் டிவி மற்றும் யூடியூப் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வெளியானது. இதில், வினோத் பாபு மற்றும் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோவில், அமெரிக்காவில் படித்துவிட்டு ஊர் திரும்பும் நாயகி பவித்ராவை, அமெரிக்காவில் படித்துவிட்டு வந்திருந்தாலும் மண்ணின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மறக்காமல் இருப்பதாகக் கோயிலில் பாட்டி ஒருவர் புகழ்ந்து பாராட்டுவார். கோயிலுக்குள் அடாவடியாக நுழையும் கதாநாயகன் வினோத். கோயிலுக்குள் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியிடம் வாக்குவாதம் செய்து தாலியைக் கழட்ட முயல்கிறார்.

சமூக சீரழிவு

சமூக சீரழிவு

இதைதடுத்த நாயகி பவித்ராவின் கழுத்தில் கதாநாயகன் வினோத், ஒரு மஞ்ச கயிறை, நாயகியின் கழுத்தில் கட்டி அதுக்கு பேர் கல்யாணமா..? என்று கேட்கிறார். ஒரு நிமிடக் காட்சிகள் மட்டுமே கொண்ட அந்த ப்ரோமோ வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. இது மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கவும், சமூக சீரழிவுக்கும் இது போன்ற சீரியல்கள் வித்திடுவதாகவும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டனர்.

ஆகஸ்ட் 16 மதியம் 3 மணிக்கு

ஆகஸ்ட் 16 மதியம் 3 மணிக்கு

பெரும் சர்ச்சையை கிளப்பிய தென்றல் வந்து என்னைத்தோடும் சீரியலும் ஆகஸ்ட் 16ந் தேதி திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ப்ரோமோவிலேயே பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த தொடர் எப்படி இருக்கும் என்பதை காண அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X