‘ஆபிஸ் 50’ கவுசிக்கின் வலையில் சிக்குவாளா ராஜி?

By Mayura Akilan

ஆபிஸ் தொடர் 50 வது எபிசோடை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை அலுவலக கெட் அப்பில் வலம் வந்த ஆபிஸ் முதன் முதலாக அவுட்டோருக்கு சென்றுள்ளது.

அலுவலக வேலையில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்த பின்னர் கார்த்திக், ராஜி, விஷ்ணு, லட்சுமி ஆகியோர் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

டீம் பாஸ் சூசன், வேலையை வெற்றிகரமாக முடித்ததற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறாள். கார்த்திக்கை மட்டும் கட்டிப்பிடித்து நன்றி சொல்லவே அது அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

சூசனுக்கு பாஸ்

சூசனுக்கு பாஸ்

இதை வைத்து விஷ்ணுவும், லட்சுமியும் கார்த்திக்கை கலாட்டா செய்கின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாத கார்த்திக் சென்னையில் அதுவும் சாப்ட்வேர் துறையில் இதெல்லாம் சகஜம் என்பது போல பேசுகிறான்.

அழும் ராஜி

அழும் ராஜி

சூசனின் செயலை ராஜியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழுது வடியும் ராஜியை சமாதானம் செய்கிறான் கார்த்திக். வேண்டுமானால் நீயும் ஒருமுறை கட்டிப்பிடித்து நன்றி சொல்லிவிடு என்று கலாட்டா செய்கிறான். இதனால் வெட்கப்பட்டு சிரிக்கிறாள் ராஜி.

மாமல்லபுரம் அவுட்டிங்

மாமல்லபுரம் அவுட்டிங்

வெற்றியைக் கொண்டாட குழுவினர் மாமல்லபுரம் அவுட்டிங் போகின்றனர். ராஜி வீட்டில் விட மறுக்கவே பொய் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். ஆனால் கடைசி நேரத்தில் ராஜியின் அப்பா வந்து சமாதானம் செய்து அனுப்பிவைக்கிறார்.

புது இடம்.. புது ஆடையில் அழகு ராஜி

புது இடம்.. புது ஆடையில் அழகு ராஜி

அவுட்டிங் என்ற உடன் ஆள் ஆளாக்கு நாகரீக உடைகளில் அசத்துகின்றனர். இதுவரை போடாத உடையை போட்டுக் கொண்டு ராஜி வரவே எல்லோருமே அவளைப் பாராட்டுகின்றனர்.

அழகாய் சிரிக்கும் கார்த்திக்

அழகாய் சிரிக்கும் கார்த்திக்

அதென்ன காதல் வந்தால் மட்டும் இந்த ஆண்கள் அழகாகி விடுவார்களா என்ன? நேற்றைய எபிசோடில் கார்த்திக்கின் அழகு கொஞ்சம் கூடுதலாகத்தான் இருந்தது. அழகாய் சிரிப்பதாக ராஜி சொல்ல, இந்த உடையில் நீ அழகாக இருக்கிறாய் என்று கூறுகிறான் கார்த்திக்.

கவுசிக் தொந்தரவு

கவுசிக் தொந்தரவு

எதிர்பாராத நேரத்தில் டீம் லீடர் கவுசிக் வந்து ராஜியை தனியாக சந்திக்கிறான். கார்த்திக்கை நம்பினால் நடுத்தெருவில் நிற்பாய் என்னை அட்ஜஸ்ட் செய்து கொள் உன்னுடைய வேலையில் உயரத்திற்குப் போவாய் என்று மிரட்டுகிறான்.

ராஜி தப்புவாளா?

ராஜி தப்புவாளா?

அவுட்டிங் போன இடத்தில் இது என்ன புது தொந்தரவு என்று குழப்பத்துடன் இருக்கிறாள் ராஜி. இந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டு வருவாள் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X