சின்னச் சின்ன ரொமான்ஸ்... கொஞ்சம் வில்லத்தனம் நிறைந்த ஆபிஸ்
விஜய் டிவியின் ஆபிஸ் நெடுந்தொடர் 350 எபிசோடை இன்னும் சில தினங்களில் எட்டிப்பிடிக்கப் போகிறது. கார்த்தி - ராஜி இடையேயான ரொமான்ஸ், விஷ்ணு - லட்சுமி இடையே மீண்டும் துளிர்க்கும் காதல், இவர்களைப் பிரிக்க நினைக்கும் சூசனின் வில்லத்தனம் என விறுவிறுப்பாக நகர்கிறது ஆபிஸ்.
என்னதான் ஆபிசில் குடைச்சல் இருந்தாலும் ரொமான்ஸ்க்கு குறைவில்லை என்பதுபோல தியர் உற்சாகமாக போய்க்கொண்டிருக்கிறது கார்த்திக் - ராஜி தம்பதியர் வாழ்க்கை.
லட்சுமி அம்மாவின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுக்க நினைக்கும் விஷ்ணுவின் அக்கறையைப் பார்த்து லட்சுமிக்கு மீண்டும் காதல் துளிர்க்கிறது.

சூசனின் வில்லத்தனம்
நெட் நெட் நிறுவனத்தில் விஸ்வநாதன் ராஜினாமாவிற்குப் பின்னர் அந்த இடத்தைப் பிடிக்கும் சூசன், கார்த்திக், ராஜி, விஷ்ணு, லட்சுமி ஆகிய நால்வரையும் ஆபிசை விட்டு வெளியேற்ற எண்ணற்ற வில்லத்தனங்களை செய்தும் அது பலிக்கவில்லை. இதனால் அவர்கள் மீதான கோபம் அதிகரிக்கிறது.

எப்படி பால் போட்டாலும்
சூசன், ஹெச் ஆர் கூட்டணியின் வில்லத்தனங்களை முறியடித்து அவர்கள் போடும் பந்துகளை சிக்கர்களாக விரட்டிக்கொண்டிருகின்றனர் கார்த்திக் டீம்.

விஸ்வநாதன் ஆதரவு
விஸ்வநாதனின் ஆதரவு கார்த்திக் டீமிற்கு இருப்பதால் சூசனின் வில்லத்தனங்களை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிகிறது.

சூசனிடம் மறுத்த விஸ்வநாதன்
ஆபிசிற்கு விஸ்வநாதன் மீண்டும் வந்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த கோரிக்கையோடு போன சூசனிடம் தன்னுடைய மறுப்பை தெரிவித்துவிடுகிறார் விஸ்வநாதன்.

கார்த்திக் – ராஜி ரொமான்ஸ்
வில்லத்தனங்களோடு அன்பு டீம் காமெடி தனியாக போனாலும் வீட்டில் கார்த்திக் - ராஜியின் ரொமான்ஸ் கொஞ்சம் கூடுதலாகவே போய்க்கொண்டிருக்கிறது. அவர்களின் கொஞ்சல்ஸ், கெஞ்சல்ஸ் பார்த்து அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி என்று இப்போதே வாசகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

லட்சுமியின் காதல்
இதுநாள்வரை விஷ்ணுவை முறைத்துக்கொண்டிருந்த லட்சுமி மீண்டும் விஷ்ணுவை நேசிக்கத் தொடங்குகிறாள். விஷ்ணுவிற்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை பொறுக்க முடியாத லட்சுமி அந்த திருமணத்தை நிறுத்தி தன் காதலை உறுதிப்படுத்துகிறாள்.

350 எபிசோடை நோக்கி
கார்த்திக்கை எப்படியாவது வேலையை விட்டு அனுப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கும் சூசன் அவனுக்கு எதிராக சதிவேலை செய்கிறாள். அந்த சதியில் இருந்து கார்த்திக் மீள்வானா? லட்சுமி - விஷ்ணு காதல் திருமணத்தில் முடியுமா? போன்ற கேள்விகளுடன் 350 எபிசோடை நோக்கி விறுவிறுப்பாக நகர்கிறது ஆபிஸ்.


Click it and Unblock the Notifications











