ராஜி செத்துப்போயிருவாளா? … சோகத்தில் தவிக்கும் கார்த்திக்!

By Mayura Akilan

விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திருமண நிச்சயம் முடிந்தும் கார்த்திக்கை மறக்க முடியாமல் தவிக்கும் ராஜி. சூசனின் காதலை மறுக்க முடியாமல் தவிக்கும் கார்த்திக் என கடந்த 10 எபிசோடுகளாவே ஒரே சோகமயம்தான்.

ஆரம்பத்தில் ஜாலியாக ஆரம்பித்த ஆபிஸ் காதல், கல்யாணம், உயரதிகாரிகளின் உள்குத்து என போக ஆரம்பித்தது.

ராஜி - கார்த்திக் இடையே காதல் இருந்தாலும் அதை மறைக்கும் ராஜி அப்பாவின் விருப்பத்திற்கு சம்மதித்து அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். இதனால் வெறுத்துப் போன கார்த்திக் சூசனிடம் ஐலவ்யூ சொல்ல அதை உண்மை என நினைத்து சந்தோசமடைகிறாள் சூசன்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

திருமணம் நிச்சயமானாலும் கார்த்திக் மீதான காதல் ராஜி மனதில் இருக்கத்தான் செய்கிறது. சூசனை கார்த்திக் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறாள் ராஜி.

கடைசி பேச்சு

கடைசி பேச்சு

அப்பா உடன் கடைசியாக ஒருமுறை பேசலாம் என்று செல்போனில் தடுமாறிபடியே பேசி முடிக்கிறாள் ராஜி. உன்னோட சந்தோசம்தான் எனக்கு முக்கியம் என்று ராஜியின் அப்பா கூறினாலும் கார்த்திக் உடனான தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறாள் ராஜி.

காதலும் கரன்சியும்

காதலும் கரன்சியும்

இந்த சோகத்திற்கு இடையே மாமாவும், விஷ்ணுவும் கார்த்திக்கிடம் பேசி ராஜியை சமாதானம் செய்யச் சொல்கின்றனர்.

காதல் என்பது கரன்சி மாதிரி பூட்டி வச்சா மதிப்பில்லை. செலவழிச்சாதான் மதிப்பு என்று தத்துவமெல்லாம் சொல்கிறார் மாமா. அதைவிட கொடுமை காதலை தேங்காய் சட்னியோடு ஒப்பிட்டு சொல்லும் தத்துவம்தான்.

தடுமாறும் ராஜி

தடுமாறும் ராஜி

விஷம் குடித்துவிட்டு சீட்டில் வந்து உட்கார்ந்த உடனே தடுமாறி விழுகிறாள் ராஜி. இதனால் பதறிப் போன விஷ்ணுவும், கார்த்திக்கும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். ராஜி பிழைப்பாளா? கார்த்திக் - ராஜி திருமணம் நடக்குமா? ராஜியின் அப்பாவின் நிலை என்ன? சூசன் தன்னுடைய காதலை விட்டுக்கொடுப்பாளா? என இனிவரும் எபிசோடுகளில் காணலாம் என்கிறார் தொடரின் இயக்குநர்.

150 வது எபிசோட்

150 வது எபிசோட்

ஆபிஸ் சீரியல் 150வது எபிசோடினை எட்ட உள்ளது. இனியாவது பரபரப்பான, சுவாரஸ்யமான காட்சிகளை எதிர்பார்க்கலாமா? அல்லது அதே கேண்டீன், ஆபிஸ் என அலுப்புத்தட்டும் காட்சிகளைத்தான் ஒளிபரப்புவார்களா என்று தெரியவில்லை. இதே ரீதியில் போனால் ஆபிசுக்கு சீக்கிரம் மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X