சின்னச் சின்ன சண்டை... சில நேரங்களில் காதல்... சொதப்பும் ஆபிஸ்!
காதல், நட்பு, அரசியல் அத்தோடு கொஞ்சம் வேலை என நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல்.
அலுவலகத்தில் நடைபெறும் சம்பவங்களை வைத்து பின்னப்பட்ட சீரியல் இது என்பதால் சுவாரஸ்யமாக தொடங்கியது. ஐடி கம்பெனியில் சாப்ட்வேர், ஹார்டுவேர் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்பாடுகளையும், அங்கே வேலையோடு வேறு என்னென்ன சமாச்சாரங்கள் நடைபெறுகின்றன என்பதையும் இந்த சீரியல் பிரதிபலிக்கிறது.
ஆனால் ஒரு ஆணை இரண்டு பேர் காதலிப்பது, காதலிக்க மறுக்கும் ஆணை பழிவாங்க துடிப்பது என சராசரி ஆபிஸாக மாறி வருதால் தற்போது போரடிக்க ஆரம்பித்துவிட்டது ஆபிஸ் சீரியல்.

சூசன் – ராஜி
ஆபிசில் கார்த்திக் மீது சூசனுக்கு காதல்... ஆனால் கார்த்திக்கிற்கோ ராஜி மீதுதான் காதல். சிலபல பிரச்சினைகளினால் சூசனின் முன்னாள் கணவன் கௌதம் சென்னை அலுவலகத்திற்கே மாற்றலாகி வர பிரச்சினை தீவிரமாகிறது.

காதல் சிக்கல்கள்
சூசனை மீண்டும் தன்வசமாக்கவேண்டும் என்று கௌதம் நினைக்கிறான். ஆனால் கௌதமை எப்படியாவது வேலையை விட்டு அனுப்ப திட்டமிட்டு கார்த்திக்கை வைத்து காய் நகர்த்துகிறாள். அது புரியாமல் சூசனின் திட்டத்திற்கு உடன்படுகிறான் கார்த்திக்.

கட்டம் கட்டிய டேவிட்
கௌதமின் செல்போனில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்களை சூசன் செல்போனுக்கு அனுப்பிவைக்கிறான் கார்த்திக். ஹெச் ஆர் டேவிட்டிடம் போய் கௌதம் பற்றி புகார் செய்யவே கௌதமை வேலையை விட்டு போகச் சொல்கிறார் டேவிட்.

சிக்கிய கார்த்திக்
ஆனால் கௌதம் செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியது கார்த்திக்தான் என்பதை விசாரணை மூலம் தெரிந்து கொள்ளும் டேவிட் கார்த்திக்கை வேலையை விட்டு நீக்குகிறார்.

காப்பாற்றும் விஸ்வநாதன்
ஆபிஸ் ஹெட் விஸ்வநாதன் புண்ணியத்தால் கார்த்திக் வேலை தப்புகிறது. ஆனால் தன்னைப் பற்றி டேவிட்டிடம் போட்டு கொடுத்தது யார் என்பது மட்டும் தெரியாமல் தவிக்கிறான் கார்த்திக்.

ராஜி – கார்த்திக்
எஸ்.எம்.எஸ் பற்றிய உண்மையை டேவிட்டிடம் சொன்னது தான்தான் என்று கார்த்திக்கிடம் ராஜி சொல்லவே மீண்டும் ராஜி மீது வெறுப்பு கொள்கிறான் கார்த்திக்.

மன்னிப்பு கேட்ட ராஜி
எஸ்.எம்.எஸ் விசயத்தை டேவிட்டிடம் போட்டுக் கொடுத்தது தான்தான் என்பதை கார்த்திக்கிடம் சொல்கிறாள் ராஜி. இதனால் கோபம் கொண்ட கார்த்திக் ராஜியிடம் பேசுவதை தவிர்த்து விடுகிறான். மீண்டும் இவர்களின் காதலில் ஒரு விரிசல் வருமா? இந்த சந்தர்ப்பத்தினை சூசன் தவறாக பயன்படுத்திக் கொள்வாளா?. விஷ்ணு - லட்சுமி காதல் என்னவாகும் என்ற எதிர்பார்ப்போடு 200 வது எபிசோடை நோக்கி நகர்கிறது ஆபிஸ்.


Click it and Unblock the Notifications











