Pandian stores 2: உழைக்கும் வர்க்கம்.. பாண்டியனை கலாய்த்த மீனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகள் பாசத்தை மையமாகக் கொண்டு ஐந்தாண்டுகளை கடந்து வெற்றிகரமான சீரியலாக நடை போட்ட இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நிறைவடைந்த நிலையில் உடனடியாக சீரியலின் அடுத்த சீசன் துவங்கப்பட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தற்போதைய சீசனில் தந்தை மற்றும் மகன்களின் உறவை கதைகளமாக இயக்குனர் கொண்டுள்ளார். இந்த சீரியல் துவங்கப்பட்ட சில வாரங்களிலேயே டிஆர்பி யில் அதிக புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு இந்த சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள் வெளியாகி வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5 வருடங்களை கடந்து முன்னணி சீரியலாக நடை போட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் நிறைவுற்ற நிலையில் உடனடியாக சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. முதல் சீசனில் அண்ணன் தம்பிகள் பாசத்தை மையமாகக் கொண்டு எபிசோட்கள் வெளியான நிலையில், இரண்டாவது சீசனில் தந்தை மகன்கள் உறவு நிலையை மையமாகக் கொண்டு கதைகளம் உருவாக்கப்பட்டுள்ளது
பாண்டியன் கேரக்டர்: தன்னுடைய மனைவி மற்றும் மூன்று மகன்கள் மற்றும் மகளை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் பாண்டியன். இதைப் பாராட்டும் ஊர் மக்கள் அவர்களுக்கு திருமணம் நடந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர். அதற்கேற்ப இரண்டாவது மகன் செந்தில் தான் காதலித்த மீனாவை திருமணம் செய்து வருகிறார். இவரது திருமணம் பாண்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் பிறகு திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்த இளைய மகன் கதிரை அவர் வெறுக்கிறார்.
மருமகள் மீனா: வீட்டிற்கு வரும் மருமகள் மீனா வீட்டில் ஒவ்வொரு விஷயத்திலும் குழப்பத்தை அடைந்து பின்பு அதை மாற்ற முயற்சிக்கிறார். சில விஷயங்களை மாற்றவும் செய்கிறார். ஆனாலும் தன்னுடைய மாமனார் பாண்டியனை மாற்றுவதற்கு அவர் படாத பாடு பட வேண்டியிருக்கிறது.
காதல் திருமணம்: மீனாவின் பெற்றோரும் காதல் திருமணத்தையடுத்து அவரை வெறுத்து ஒதுக்குகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் மீனா, தன்னுடைய கணவனுடன் வெளியூருக்கு சில தினங்கள் செல்ல வேண்டும் என்று தன்னுடைய மாமனாரிடம் கேட்கிறார்.
குடும்பத்துடன் சுற்றுலா: இதை ஏற்றுக்கொள்ளும் பாண்டியன், குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு செல்லலாம் என்று கூறுகிறார். மூட்டை முடிச்சு, கட்டுசோறுடன் அவர்களது பயணம் துவங்குகிறது. பணத்தை சேமிக்கிறேன் என்பதாக அவர்களது பயணத்தில் பல குளறுபடிகளை செய்கிறார் பாண்டியன். இதையடுத்து காமெடியுடன் அவர்கள் பயணம் தொடர்கிறது.
ரோட்டு கடையில் சாப்பாடு: ஒரு வழியாக ரூம் போட்டாலும் செந்தில் மற்றும் மீனாவிற்கு இடையில் தனிமை கிடைக்காமல் அவர்களும் தவிக்கின்றனர். இந்நிலையில் சாப்பாட்டிற்காக வெளியில் செல்லும் குடும்பத்தினருக்கு ரோட்டு கடையில் உணவு வாங்கிக் கொடுக்கிறார் பாண்டியன். இது குறித்து இந்த வார பிரமோ வில் காட்டப்படுகிறது. வெளியூருக்கு வந்து நல்ல ஓட்டலில் சாப்பிட வேண்டும் என்று மீனா கூறுகிறார்.
பாண்டியனுக்கு அஜீரணம்: ஆனால் உழைப்பவர்களுக்கு எந்த சாப்பாட்டை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகும் என்று பாண்டியன் கூறுகிறார். அனைவரும் சாலையோர கடையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த உணவு மறுநாள் பாண்டியனுக்கு வினையாக மாறுகிறது. சாப்பிட்ட சாப்பாட்டால் அவருக்கு பிரச்சினை ஏற்படுகிறது வாந்தி எடுத்து, உடல் உபாதையுடன் அவரது பொழுது கழிகிறது.
கலாய்த்த மீனா: இதை அடுத்து குடும்பத்தினர் அனைவரும் கவலை கொள்கின்றனர். ஆனால் அங்கு வரும் மீனாவோ, உழைக்கும் வர்க்கம் என்று முஷ்டியை தூக்கி என்னை கலாய்க்கிறார். இவ்வாறு தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











