Pandian stores 2 serial: திருமணத்திற்கு தயாராகும் சரவணன்.. கல்யாண வைபோகத்தில் தேடி வந்த பெண்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக வலம்வந்துக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் தற்போது சரவணனின் திருமணத்தையொட்டிய காட்சிகளே தொடர்ந்து எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன. செந்தில் மற்றும் கதிரின் திருமணங்களால் கேள்விக் குறியான சரவணனின் திருமணத்தை 50 நாட்களில் முடிப்பேன் என்று சபதம் இடுகிறார் பாண்டியன். தொடர்ந்து அதுவரை தான் காலில் செருப்பு போட மாட்டேன் என்றும் சபதமிட்ட நிலையில், அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு எபிசோட்கள் வெளியாகின.

இதையடுத்து சரவணனுக்கு புரோக்கர் மூலமாகவும் மீனா மூலமாகவும் வந்த வரன்களும் முத்துவேல், சக்திவேல் ஆகியோரால் தட்டி கழிந்த சூழ்நிலையும் காணப்பட்டது. தொடர்ந்து மேட்ரிமோனி மூலம் வந்த பெண்ணும் சரவணன் தன்னை தனியாக சந்திக்க வராதது குறித்து கோபம் கொள்வதாக காணப்படுகிறது. தனியாக முடிவெடுக்கும் அந்தப் பெண்ணை ஏற்கும் மனநிலையும் பாண்டியன் மற்றும் குடும்பத்தினருக்கு இல்லாத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் கல்யாண வைபோகம் திருமண நிகழ்ச்சி மூலமும் சரவணனுக்கு பெண் பார்க்கும் படலம் நடப்பதாக இந்த வார பிரமோவில் காட்டப்பட்டுள்ளது.

Vijay TV s Pandian stores 2 serial this week 25th to 30th March 2024 promo


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இயல்பான ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த தொடரின் அடுத்தடுத்த கதைக்களங்கள் காணப்படுவதால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் சேனலின் 3வது இடத்தில் இந்த சிரியல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. சீரியல் துவங்கி சில மாதங்களே ஆன நிலையிலும் இந்த உயரத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எட்டியுள்ளது. தொடரில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையமாக வைத்து எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அடுத்தடுத்த திருமண முயற்சிகள்: இந்த சீரியலில் மூத்த மகன் சரவணனின் திருமணம் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் பாண்டியன் உள்ளிட்ட குடுமபத்தினர் அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றன. புரோக்கர் மூலமும் மீனா மூலமும் வந்த வரன்கள் தட்டி கழிகிறது. கோமதியின் அண்ணன் முத்துவேல் தொடர்ந்து சதி செய்து இந்த திருமணங்களை நிறுத்துகிறார். இதற்கு அவரது மகன் குமரனும் உடந்தையாக இருக்கிறார். இது தெரியாமல் முன்னதாக தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்காகவும் அண்ணன் மகள் வாழ்க்கைக்காகவும் கதிர் -ராஜி திருமணத்தை நடத்தி வைக்கிறார் கோமதி.

கல்யாண வைபோகம் நிகழ்ச்சி: இதனிடையே மேட்ரிமோனி மூலம் வந்த வரனும் தட்டிப் போகிறது. அந்தப் பெண் சுயமாக முடிவெடுப்பது பாண்டியனுக்கு பிடிக்காமல் போகிறது. இந்நிலையில் கல்யாண வைபோகம் என்ற நிகழ்ச்சி மூலம் சரவணனுக்கு பெண் பார்க்க பாண்டியன் குடும்பத்தினர் செல்கின்றனர். வரன்தேடும் பெண்வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் ஒன்றாக இணையும் இந்த நிகழ்ச்சியில் பெண் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்று கூட்டுக் குடும்பமாக வாழும் மனநிலை கொண்ட பெண் தங்களுக்கு வேண்டும் என்றும் சரவணன் சார்பில் பேசும் பாண்டியன் கூறுவதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள இந்தத் தொடரின் பிரமோவில் காணப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த கலாட்டாக்களுக்கு வெயிட்டிங்: இதையடுத்து நிகழ்ச்சியில் பேசும் பெண்ணின் வீட்டாரும் இதே கருத்துக்களை கூறுவதாகவும் காணப்பட்டது. இதனால் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுவதாகவும் பிரமோவில் காணப்படுகிறது. இதில் பிரபல சீரியல் நடிகை சரண்யா மணப்பெண்ணாக இணைந்துள்ளார். முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சீசன் ஒன்றில், சித்ராவிற்கு பிறகு நடிக்க இவர் கமிட்டாகி பின்பு அதிலிருந்து விலகிய நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இவர் இணைந்துள்ளார். இதனிடையே இந்த கல்யாணத்தில் என்னென்ன கலாட்டாக்கள் நடக்கும் என்பது குறித்து தற்போதே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X