Pandian stores 2 serial: உங்களவிட பெரிய ஆபீசராகி காட்டுறேன்.. மாமனாரிடம் செந்தில் ஆவேசம்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் செந்தில் மற்றும் மீனா சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது. மீனா மற்றும் செந்திலுக்கு திருமணமாகி மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்களை மீனாவின் அப்பா ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார். இதனால் மீனா தொடர்ந்து தன்னுடைய அப்பாவிடம் அவமானப்படுவதையும் இதன் மூலம் மன உளைச்சலுக்கு உள்ளாகி அழுவதையும் பார்க்க முடிகிறது.

மீனா தன்னை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக தொடர்ந்து அழுவதை பொறுத்துக் கொள்ள முடியாத செந்தில் தான் கவர்மெண்ட் வேலைக்கு முயற்சி செய்ய உள்ளதாக முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில் இதையொட்டிய காட்சிகளை தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் பார்க்க முடிந்தது.

Television Pandian stores 2 serial Vijay TV 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இயல்பான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த எபிசோட்களை இந்த சீரியல் கொடுத்து வருகிறது அந்த வகையில் முன்னதாக மீனாவின் அப்பா பிறந்தநாளுக்கு சென்றபோது மீனாவை அவர் திட்டி தீர்க்கிறார். தன்னுடைய விருப்பத்தை மீறி மீனா திருமணம் செய்து கொண்டதை சுட்டிக்காட்டி அவரை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். இதனால் அப்பாவின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க செல்லும் மீனா கண்ணீர் விட்டு கதறியதை பார்க்க முடிந்தது.

இந்த வார ப்ரமோ: மீனாவை சமாதானம் செய்யும் செந்தில், மீனாவின் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்ப தான் கவர்மெண்ட் வேலைக்கு செல்வேன் என்று செந்திலிடம் கூறுகிறார். இதை கேள்விப்படும் மீனா தனக்காக செந்தில் கவர்மெண்ட் வேலைக்கு செல்ல முடிவெடுத்ததை நினைத்து நெகிழ்கிறார். இதனிடையே இந்த வார பிரமோவில் இனி தங்களுக்கு தன்னுடைய புகுந்த வீடு தான் பிரதானம் என்றும் அங்கு நடக்கும் கஷ்ட நஷ்டங்களை பொறுத்துக் கொண்டு தாங்கள் இருக்க வேண்டும் என்றும் மீனா செந்திலிடம் கூறுவதாக காணப்படுகிறது.

மாமனாரிடம் செந்தில் ஆவேசம்: இந்நிலையில் தன்னுடைய தம்பி கதிருடன் மீனாவின் அப்பா வீட்டிற்கு செல்லும் செந்தில், மீனா அப்பா என்று ஆக்ரோஷமாக உள்ளிருக்கும் அவரை அழைப்பதாகவும் தொடர்ந்து தான் மீனாவை திருமணம் செய்ததற்கு தடையாக தான் கவர்மெண்ட் மாப்பிள்ளை இல்லை என்பது மட்டும்தான் இருக்கிறது, நான் கண்டிப்பாக கவர்ன்மெண்ட் வேலை வாங்கி காட்டுகிறேன், உங்களை விட பெரிய ஆபீஸர் ஆகி காட்டுகிறேன் என்று கூறுவதாக காணப்பட்டது. தொடர்ந்து மீனாவுடன் தான் இந்த வீட்டிற்கு வருவேன் என்றும் கூறுவதாக காணப்படுகிறது. இதை வீடியோ எடுக்கும் கதிர், தொடர்ந்து தன்னுடைய அண்ணி மீனாவிடம் காட்டுகிறார்.

மீனா நெகிழ்ச்சி: இந்த வீடியோவை பார்க்கும் மீனா நெகிழ்ச்சியுடன் அழுவதையும் இந்த வார பிரமோவில் பார்க்க முடிகிறது. இந்த தொடரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை பார்க்க முடிகிறது. முதல் சீசனில் அண்ணன் - தம்பிகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பையும் சண்டை சச்சரவுகளையும் பார்க்க முடிந்த நிலையில் இந்த இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையிலான பாசத்தையும் குடும்பத்தினருக்குள் ஏற்படும் சிறுசிறு சஞ்சலங்கள், சச்சரவுகளையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலில் முன்னணி சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அமைந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X