Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்திருந்தது. வாசல் பெருக்கிக் கொண்டிருந்த தன்னுடைய அம்மா வடிவு கால் வழுக்கி கீழே விழ, அதைப் பார்க்கும் ராஜி, இருக்கும் பகையை மறந்து அவரை தூக்கி வீட்டிற்கு கைத்தாங்கலாக அழைத்து செல்கிறார். தைலம் தேய்த்து விடுகிறார். ஒரு கட்டத்தில் தான் தன்னுடைய அப்பா வீட்டிற்குள் நுழைந்தது நியாபகம் வர, வெளியில் செல்ல முற்படுகிறார்.

அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த ராஜியின் அப்பா, சித்தப்பா மற்றும் அண்ணன் ஆகியோர் வீடு திரும்புகின்றனர். ராஜியை வீட்டில் பார்த்து ஆத்திரமடைகின்றனர். தொடர்ந்து அவளை திட்டித் தீர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் குமரன் ராஜியை அடிக்க மற்றவர்கள் தடுக்கின்றனர். ராஜியை வீட்டை விட்டு துரத்தும் குமரன், மீண்டும் அடிக்கப் பாய, பாண்டியன் இடையில் புகுந்து தடுக்கிறார். இதையடுத்து அவர் மீது அடிபடுகிறது.

Vijay TV s Pandian stores 2 serial today 20th April 2024 episode Clash between Pandian amp amp Muthuvel family


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். பாண்டியன், கோமதி, கதிர், செந்தில், சரவணன் உள்ளிட்ட கேரக்டர்களை மையமாக கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையிலேயே அமைந்திருந்தது. காலையில் வாசல் பெருக்கிக் கொண்டிருந்த தன்னுடைய அம்மா வடிவு, கால் இடறி கீழே விழ, அதைப் பார்க்கும் ராஜி பதைபதைத்து ஓடிச் சென்று அவரை தூக்குகிறார். தொடர்ந்து நடக்க முடியாமல் இருக்கும் அவரை கைத்தாங்கலாக தூக்கி சென்று உள்ளே அமர வைக்கிறார்.

அப்பா வீட்டிற்குள் சென்ற ராஜி: ஒரு கட்டத்தில் பாட்டி கூறியவுடன்தான் தான் தன்னுடைய அப்பா வீட்டிற்குள் வந்ததை உணரும் ராஜி, உடனடியாக வெளியில் செல்ல முனைகிறார். அதற்குள் அவரது அப்பா, சித்தப்பா, அண்ணன் என அனைவரும் வந்துவிடுகின்றனர். ராஜி ஏன் வீட்டிற்குள் வந்தார் எனக்கேட்டு திட்டித் தீர்க்கின்றனர். ஒருகட்டத்தில் அதிகமான ஆத்திரத்துடன் குமரன் ராஜியை அடிக்கிறார். வீட்டிற்குள் வெளியில் தள்ளுகிறார். தொடர்ந்து அடிக்க முயல, இதை பார்க்கும் பாண்டியன் இடையில் புகுந்து தடுக்கிறார். இதையடுத்து அவர்மீது குமரனின் அடி படுகிறது. இதைப் பார்க்கும் கதிர், தன்னுடைய அப்பாவை அடித்ததற்காக சண்டைக்கு நிற்கிறார். குமரனை அடிக்கவும் பாய்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

மூளும் சண்டை: இதையடுத்து கோமதி, மீனா உள்ளிட்டவர்கள் கதிரை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்து வருகின்றனர். இதையடுத்து தான் அம்மாவை காப்பாற்ற இப்படி செய்ததாகவும் இதுபோல நடக்கும் என்று தான் யோசிக்கவில்லை என்றும் ராஜி அழுகையினூடே சொல்கிறார். அவரை பாண்டியன், கோமதி உள்ளிட்டவர்கள் சமாதானப்படுத்துகின்றனர். ஆனால் கதிரை சமாதாப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். கதிர் குமரனை அடிக்க தொடர்ந்து சீறுகிறார். இதையடுத்து அறைக்கு செல்லும் ராஜியை கதிர் சமாதானப் படுத்துகிறார். ஏதாவது வேண்டுமா என்று கரிசனத்துடன் கேட்கிறார்.

மீனாவை கலாய்த்த கோமதி: இதையடுத்து சமையலறையில் கோமதி மற்றும் மீனா இருவரும் சமைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோமதி கேட்கும் கேள்விகளுக்கு சிரத்தையில்லாமல் பதிலளிக்கிறார் மீனா. முந்தைய நாள் இரவில், மீனாவை ஓடி வந்தவள் என்று கோமதி கூறியதை சுட்டிக் காட்டுகிறார். தான் எதையாவது பேசினால், இதுபோல மனது சங்கடப்படும்படி கோமதி பேசுவார் என்றும் கூறுகிறார். இதற்கு அக்கறையாக பதிலளிப்பார் என்று பார்த்தால், நீ ஓடி வரவில்லை, காரில்தானே வந்தாய், அப்படி சொல்லியிருக்க வேண்டுமோ என்று மீண்டும் மீனாவை கடுப்பேற்றுகிறார் கோமதி. இவ்வாறு இன்றைய எபிசோட், மோதலும், காதலும், காமெடியுமாக இருந்தது.

வடிவுக்கு அறைவிட்ட முத்துவேல்: இதனிடையே ராஜியை அடித்ததற்காக குமரனை அப்பத்தா, மாரி மற்றும் வடிவு அனைவரும் திட்டித் தீர்க்கின்றனர். இதையடுத்து தன்னுடைய மகன் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சக்திவேல் கூறுகிறார். தொடர்ந்து தன்னுடைய கணவன் முத்துவேல் தொடர்ந்து அனைத்து விஷயங்களிலும் மௌனமாக இருப்பதால்தான் தன்னுடைய மகள் ராஜியை கண்டவர்களும் அடிப்பதாக வடிவு கூறுகிறார். இதனால் கடுப்பாகும் சக்திவேல், புலம்பித் தீர்க்கிறார். தொடர்ந்து வடிவு அதையே கூற, முத்துவேல் அவரை அறைவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X