சீரியலை திடீரென ஊத்தி மூடிய விஜய் டிவி... ஷாக்கான ரசிகர்கள்… என்ன காரணமாக இருக்கும்!

சென்னை : மக்களின் பேராதரவை பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்புடன் குஷி சீரியல் முடிந்துள்ளது.

ஸ்டார் விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த சீரியலில் ப்ரஜின் பத்மநாபன் மற்றும் ஷ்ரேயா அஞ்சன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

அன்புடன் குஷி

அன்புடன் குஷி

இந்த சீரியலில் அன்பு என்ற கேரக்டரில் ப்ரஜின் நடிக்க அவருக்கு ஜோடியாக, குஷி என்ற கேரக்டரில் ஷ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் துவங்கிய போது நடிகர் ப்ரஜினுக்கு ஜோடியாக குஷி கதாபாத்திரத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்தார். திடீரென அவர் அந்த சீரியலை விட்டு விலகினார். மான்சி கதாபாத்திரத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வந்தார். இவரும் இந்த சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்து விலகினார்.

ஷ்ரேயா அஞ்சன்

ஷ்ரேயா அஞ்சன்

இதைடுத்து, நடிகை ஷ்ரேயா அஞ்சன் குஷி கேரக்டரில் நடித்து வந்தார். ராஜா ராணி சீசன் 2வில் ஹீரோவாக நடித்து வரும் சித்துவின் காதல் மனைவி தான் ஷ்ரேயா அஞ்சன். ஷ்ரேயா அஞ்சன் இந்த சீரியலில் இணைந்த பொது 200-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டு சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருந்தது. ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தின் வீட்டில் வேலை செய்துவரும் அன்பு, முதலாளி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்.

காதல் மற்றும் திருமணம்

காதல் மற்றும் திருமணம்

முதலாளியின் மகளான குஷி ஃபேஷன் டிசைனராக வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் குடும்பத்தின் வற்புறுத்தலால், ராஜஸ்தான் பையனை திருமணம் செய்து கொண்டால் தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறாள். குஷியின் ஆசை மற்றும் அன்பு - குஷி இடையேயான காதல் மற்றும் திருமணம் உள்ளிட்டவற்றை சுற்றி இந்த சீரியலில் கதைக்களம் அமைந்து இருந்தது.

அன்புடன் குஷி முடிந்தது

அன்புடன் குஷி முடிந்தது

இந்நிலையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்த அன்புடன் குஷி சீரியல் 341 எபிசோடுகளுடன் ஆகஸ்ட் 13ம் தேதியோடு முடிவடைந்துள்ளது. இந்த தவலை , இந்த சீரியலில் குஷி கேரக்டரில் நடித்து ஷ்ரேயா அஞ்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , சீரியல் நிறைவுபெற்றது குறித்து, அன்புடன் குஷியின் மிக அழகான பயணம் என ஒரு வீடியோக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சீரியலில் இடம் பெற்ற அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளனர். மேலும், அதில், ரசிகர்கள் தந்த அன்புக்கும் ஆதரவுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

குக் வித் காதல் வெப் தொடரில்

குக் வித் காதல் வெப் தொடரில்

சித்தார்த்தும் ஸ்ரேயா அஞ்சனும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் இணைந்து நடித்திருந்தனர். அந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அந்த தொடர் விரைவில் முடிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மிர்ச்சி தமிழ் யூ-ட்யூப் சேனலில் ஒளிபரப்பாகும், குக் வித் காதல் என்ற வெப் தொடரில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X