கல்யாணம் முடிந்ததும் கன்னத்தில் பச்சக்.. விஜய் டிவி பிரியங்காவின் 2வது கணவர் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் வி.ஜே. பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தனது ஜாலியாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால், மக்கள் மத்தியில் மிகவும் பிடித்துப் போன தொகுப்பாளினியாக மாறினார். அவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவர் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன்குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இப்படியான நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கொஞ்சம் எளிமையாக நடத்தப்பட்டுள்ள இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் பிரியங்காவை திருமணம் செய்து கொண்டவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Vijay TV Priyanka Deshpande Getting Second Marriage Her Husband Name is Vasi He Kiss Priyanka Video

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் பிரியங்காவின் அம்மாவும் அவரது தம்பியும் உள்ளார்கள். மேலும் மண மேடையில் பிரியங்காவின் தகப்பனார் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. பிரியங்காவை திருமணம் செய்து கொண்டவர் பெயர் வசி. இந்த பெயர் தான் அவரது முழுப்பெயரா? அல்லது முழுப் பெயர் வேறு ஏதுமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Vijay TV Priyanka Deshpande Getting Second Marriage Her Husband Name is Vasi He Kiss Priyanka Video

முத்தம்: மணமேடையில் மாப்பிள்ளை வசி, தொகுப்பாளினி பிரியங்கா கழுத்தில் தாலி கட்டிய பின்னர், அனைவரும் தாலியை சரியாக எடுத்து விடச் சொல்கிறார்கள். தாலி கட்டும்போதே மிகவும் எமோஷனலான பிரியங்கா, தாலி கட்டி முடித்த பின்னர், கணவர் வசியை மிகவும் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தியபடி பார்க்கிறார். உடனே பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்து அன்பைப் பரிமாறுகிறார் வசி. இந்த காட்சிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் பிரியங்காவுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமா என்ற கேள்வியை பலரும் கேட்டு வருகிறார்கள். தனது இரண்டாவது திருமணம் குறித்து பிரியங்கா இதுவரை எதுவும் கூறவில்லை.

சீரியல் தயாரிப்பாளர்: பிரியங்கா தேஷ்பாண்டேவைத் திருமணம் செய்துள்ள வசி என்பவர் சீரியல் தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் குறித்த வீடியோ, குறிப்பாக தாலி கட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதில், பிரியங்காவின் அம்மாவும் சகோதரரும் செம மகிழ்ச்சியில் உள்ளார்கள். மிகவும் நெருங்கிய வட்டத்தினர் மத்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனாலும் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் பிரியங்காவின் ரசிகர்கள் பலர் இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணத்தை முடுச்சுட்டீங்களே பிரியங்கா என செல்லமாகவும் கேள்வி கேட்டு வருகிறார்கள். தற்போது இணையத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் சீரியல் தயாரிப்பாளர் வசி ஆகியோரின் திருமணம் குறித்துதான் பரவலாக பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X