இப்பதானே கல்யாணம் ஆச்சு அதுக்குள்ளையா.. பிரியங்கா காலுங்கு என்ன ஆச்சு.. வேதனையில் கணவர்!
சென்னை: விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்த நிலையில், காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு பிரியங்கா என அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.
அனைவரின் மனம் கவர்ந்த பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதால், தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி யாருக்குமே சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தார். பிரியங்காவின் கணவர் பெயர் வசி, இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன்.
பிரியங்கா தேஷ்பாண்டே: இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை வசி நடத்தி வருகிறார். இதற்காக சின்னத்திரை நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்த போது, பிரியங்கா தேஷ்பாண்டிற்கும் வசியுடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதையடுத்து இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான கையோடு, பிரியங்கா தனது காதல் கணவருடன் லண்டனுக்கு தேன்னிலவிற்கு சென்றனர். இதனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சில எபிசோடுகளை பிரியங்கா தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கினார்.\


என்ன ஆச்சு பிரியங்கா: இதையடுத்து, பிரியங்காவின் கணவர் வசி தனது இன்ஸ்டாகிராமில், பிரியங்கா உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, பிரியங்கா தேஷ்பாண்டேவை குறிப்பிட்டு எப்போ வர்றீங்க என கேட்டு இருந்தார். அதற்கு கமெண்ட் மூலம் ரிப்ளை கொடுத்த பிரியங்கா, ஐ லவ் யூ... இன்னும் சில நாட்களில் வந்துவிடுகிறேன் என பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த பலர், என்ன பிரியங்கா, கணவரை இப்படி தவிக்க விடலாமா... என்றும், கணவரை தனியா விட்டுவிட்டு பிரியங்கா எங்க போனீங்க என பலர் இணையத்தில் கேள்வி கேட்டுவந்தனர். தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, காலில் எலும்பு முறிவு என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலர், பதறிப்போய் நலம் விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











