பிக்பாஸுக்கு பிறகு சம்பளத்தை உயர்திய பிரியங்கா.. இந்த வேலைக்கு இவ்வளவு சம்பளமா?

சென்னை : சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் டிவியில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த தொலைக்காட்சியில் டிடிக்கு அடுத்த படியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா.

விஜய் தொலைக்காட்சியில் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க பிரியங்கா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினி பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். எந்த நிகழ்ச்சி என்றாலும் அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக காமெடியாக தொகுத்து வழங்குவது பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு தனிக்கலை. இதனால், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

தனி யூடியூப் சேனல்

தனி யூடியூப் சேனல்

சூப்பர் சிங்கர் உட்பட விஜய் டிவியின் பல சூப்பர் ஹிட் ஷோக்களை திறம்பட தொகுத்து வழங்கி வரும் பிரியாங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டா, யூடியூப் போன்ற சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை, தொலைதூர மற்றும் வேடிக்கையான பயணங்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழும் ஜாலி நிகழ்வுகள் உள்ளிட்ட பல வீடியோக்கள் மற்றும் Vlogs-ஸ் போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிரியங்கா அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவின் நடவடிக்கையால் பல விமர்சனங்கள் எழுந்தாலும், நெகடிவ் விமர்சனங்களையும், அன்பையும் பெற்று 2வது இடத்தை பெற்றார்.

இவ்வளவு சம்பளமா?

இவ்வளவு சம்பளமா?

சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது நடிகை நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகும். அந்த வகையில், விஜய்டிவி தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்குவதற்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா? பொய்யா? என்ற தகவல் தெரியாது ஆனால், இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து... ஆத்தாடி இந்த வேலைக்கு இவ்வளவு சம்பளமா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X