அய்யயோ நெஞ்சு அலையுதடி.. ஆகாயம் இப்போ வளையுதடி.. கவின் லாஸ்லியாவுக்கு விஜய் டிவி போட்ட பிஜிஎம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 :Day 59 : வெக்கத்தில் சிரித்த Losliya- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு என தனி புரமோவை போட்டுள்ளது விஜய் டிவி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சாக்ஷியை காதலித்தார். பின்னர் லாஸ்லியாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவருடனான காதலை முறித்துக்கொண்டார்.

தற்போது லாஸ்லியா கவினை காதலிப்பதாக தெரிகிறது. கவினுடன் ஏற்பட்ட காதலால் அப்பா அப்பா என்று அழைத்து வந்த சேரனிடம் இருந்தும் விலகி வருகிறார் லாஸ்லியா.

கவினின் பெயர்

கவினின் பெயர்

சேரனின் பாசத்தையும் தற்போது சந்தேகப்படும் லாஸ்லியா, எப்போதும் கவினுடன் கதைக்கவே ஆசைப்படுகிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் நீங்கள் பேச விரும்பும் நபர் யாராக இருக்கும் என்ற பிக்பாஸின் கேள்விக்கும் லாஸ்லியா கவினின் பெயரையே கூறினார்.

வித்தியாசமாக

வித்தியாசமாக

லாஸ்லியா முழுவதுமாக கவினை காதலிக்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது. கவினுடன் பேசுவது, சிரிப்பது, வெட்கப்படுவது என அவரிடம் மட்டும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார் லாஸ்லியா.

கவின் மட்டும் ஏன்?

கவின் மட்டும் ஏன்?

கவின் நான்கு பெண்களை கன்டென்ட்டுக்காக காதலித்தேன் என்று கூறி அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சரவணனை அதிரடியாக வெளியேற்றியே பிக்பாஸ் கவினை மட்டும் ஏன் வெளியேற்றவில்லை என கேள்விகள் எழுந்து வண்ணம் உள்ளன.

பிஜிஎம் போட்டு

பிஜிஎம் போட்டு

கவின் விஜய் டிவியின் புராடெக்ட் என்பதால் அவரை கண்டு கொள்ளவில்லை என்றும் கருத்துகள் எழுந்து வருகின்றன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் டிவி கவின் ஒவ்வொரு காதலையும் பிஜிஎம் போட்டு வளர்த்து விடுகிறது.

இன்றைய புரமோ

அந்த வகையில் இன்று வெளியான புரமோவில்
அய்யயோ நெஞ்சு அலையுதடி.. என்ற ஆடுகளம் படத்தின் பாடலின் பிஜிஎமை ஒளிபரப்பியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

இதுக்கு பேரு என்ன தெரியுமா?

இதுக்கு பேரு என்ன தெரியுமா கவின்? நல்ல வேளை சாக்ஷி நீ தப்பிச்சிட்ட என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஆகாயம் இப்போ வளையுதடி

அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னை பார்த்த.. கவிலியா மொமென்ட்ஸ் நிறைய இருக்கு போலயே என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கெமிஸ்ட்ரி வேற லெவல்

இவங்க இரண்டு பேருக்கும் ஜோடியாக கட்டாயம் பட வாய்ப்புக்கள் வரும்.. கெமிஸ்ட்ரி வேற லெவல்.. என்று கூறுகிறார் இவர்.

அருவெறுப்பா இருக்கு

ஏன்யா.. இன்னும் இந்த கருமாந்திரம் புடிச்ச கக்கூஸ் காதலை செக்மண்ட்டை நிறுத்த மாட்டிங்களா? அருவெறுப்பா இருக்கு.. என்கிறார் இவர்.

இதெல்லாம் ஒரு புரமோ

இதெல்லாம் ஒரு புரமோ.. என்டோமால் ஷைன் இந்தியா உங்களுக்கு வேற டிவி சேனலே கிடைக்கலையா? இந்த சேனல் கவின மட்டும் நல்லா புரமோட் பண்றாங்க.. உங்களுக்கு அவமானம்.. இவ்வாறு கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X